கட்சிகளும், அவை காட்டும்
காட்சிகளும் :
 |
 |

நாங்கள் எங்கள்
தாத்தா காலம் தொட்டு
தி.மு.க கட்சியை சேர்ந்தவர்கள்.
எங்கள் தாத்தா காங்கிரசை
விட்டு தந்தை பெரியார்
வெளியேறின போது தாமும்
வெளியேறி அவரோடு அடியொட்டி
நடந்தவர். பின்பு. அண்ணா
பெரியாரை விட்டு தனியே
வந்து தனி இயக்கம் காணும்போது
அவரும் தி.மு.க வந்தார்.
பின்பு அவர் அவர் மகனான
எங்கள் அப்பாவும் தி.மு.கவில்
மிகவும் பற்றுதலோடு இருந்தவர்.
எங்கள் அம்மாவும் தி.மு.க
குடும்பத்தை சேர்ந்தவர்.
என் தந்தை என் அம்மாவை
திருமணம் செய்திருந்த
புதிதில் என் அம்மாவை
கடைத்தெருவுக்கு அழைத்து
செல்வாராம். அப்போது
கலைஞர் கருணாநிதி திருச்சி
வரும்போது , என் தாயும்
தந்தையும் இருக்கிற கடைத்தெருவை
கடந்து செல்லும் வேளைகளில்
அவரை காணும் ஆவலில் என்
அம்மாவை கடைதெருவிலேயே
நிறுத்தி விட்டு ஓடிவிடுவாராம்.
அந்த அளவுக்கு கலைஞர்
என்றால் என் அப்பாவுக்கு
உயிர். என் அம்மாவும்
அதற்காக கோபித்துக் கொள்ள
மாட்டார். என்னை அழைத்து
செல்ல வேண்டியது தானே
என்று என் அப்பாவிடம்
கோபித்துக் கொள்வாராம்.
அந்த அளவுக்கு கலைஞர்
மேல் பற்று உள்ளவர்கள்
என் தாய் குடும்பத்தினர்,
நாங்களும் சளைத்தவர்களல்லர்.
என் அண்ணா, என் அக்கா, நான்,
மற்றும் என் தங்கைகள்
இருவரும், தி.மு.கவின்
மேலும் அதன் தலைவர் கலைஞர்
மீதும் பெரும் விருப்புக்
கொண்டவர்கள். தி.மு.கவின்
கொள்கைகளான திராவிடக்
கோட்பாடு, சுயமரியாதை,
பகுத்தறிவு, தமிழ்ப்
பற்று, பெண்ணடிமை ஒழிப்பு,
சமூக நீதி, சாதி மறுப்பு,
, ஆரிய எதிர்ப்பு, சமநீதி,
மாநில சுயாட்சி, சுயநிர்ணய
உரிமை, இன,மொழி உரிமைகள்,
ஹிந்தி மொழித்திணிப்பு
எதிர்ப்பு போன்ற பெரியார்
வழி வந்த கொள்கை நலன்களை
பேணிய தி.மு.கவை சேர்ந்தவள்
என சொல்லிக் கொள்வதில்
பெரு விருப்பு உடையவளாய்
இருந்தேன்.
|
ஆனால், "உன் அத்தனை
நினைப்பையும் தூக்கி
உடைப்பிலே போடடி கைக்காரி"
என்கிற மாதிரி கலைஞர்
கருணாநிதியின் ஈழத்துரோகம்
அமைந்து விட்டது. கலைஞர்
இன்று அருவருத்தக்க,
கயமைகள் நிறைந்த , மனிதத்தன்மையற்ற,
சுயநலமிக்க ஒரு மனிதராக
மாறி விட்டார். ஒரு கொடுமையான,
கொடூரமான குடும்ப அரசியலை
தான் அவர் நடத்துகிறார்.
தமிழ மக்களின் அனைத்து
நலன்களும் புறக்கணிக்கப்பட்டு
தன குடும்பத்தினை அரசியல்
மற்றும் பொருளாதார மட்டத்தில்
நிலை நிறுத்தவே தன ஆட்சி
அதிகாரத்தை பயன்படுத்தக்
கூடிய ஒரு சர்வாதிகாரியாக
மாறி விட்டார். அதுவும்
ஈழப்பிரச்சினையில் அவர்
நடத்திய நாடகங்களும்,
காட்டி கொடுத்த களவாணித்தனமும்
சீச்சீ., இவரையா நான் இத்தனை
காலமும் என் தலைவன் என
நம்பிக் கிடந்தேன் என
நினைக்கும் போது, இத்தனை
காலம் ஒரு சுயநலமிக்க
நபரிடம் ஏமாந்து கிடந்தோம்
என நினைக்கும் போது, என்னையே
அருவருத்துக் கொள்கிறேன்.
என்னால் என்ன செய்ய முடியும்?
ஒன்று தான் முடிந்தது.
சென்ற பாராளுமன்ற தேர்தலின்
போது என் கரங்கள் முதல்
முறையாக அ.தி.மு.க. விற்கு
ஓட்டு போட்டது.
|
ஈழப்பிரச்சினையில்
தான் கருணாநிதியின் உண்மையான
சுயரூபம் வெளிப்பட்டது.
ஈழம் குறித்து பலவேளைகளில்
தன் மன வெளிபாட்டை கருணாநிதி
தெரிவித்து தான் வந்தார்.
பாவி மக்கள் நாம் தான்
அதை அறிந்துக் கொள்ளாமல்
நம்பி மோசம் போனோம்."ஈழத்தமிழர்
விஷயத்தில் உங்கள் நிலைப்பாடு
என்ன?", "மத்திய அரசின் நிலைப்பாடு
என்னவோ அதுதான்". "மத்திய
அரசு என்ன நினைக்கிறது?",
"அது பற்றி தான் பேச்சு
நடக்கிறது." "ஈழத்தமிழர்
விஷயத்தில் ஜெயலலிதா
இவ்வாறு கூறுகிறாரே",
"அதுப்பற்றி வைகோவிடம்
போய் கேளுங்கள்", இப்படியாகத்தானே
கருணாநிதியின் பதில்கள்
இருந்தன? ரொம்பவும் வற்புறுத்தி
கேட்டாலோ, ஒரு பெரிய அறிக்கையை
விட்டு, நான் ஈழத்துக்காக
என் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா
செய்தேன்,அவ்வபோது போராட்டங்கள்
நடத்தினேன், ஈழப் போராளிக்
குழுக்களுக்கு பண உதவிகள்
செய்தேன் என்று இப்படியாகத்தானே
சொன்னார். ஈழம் கிடைத்தால்
மகிழ்ச்சி, இல்லையென்றால்
பரவாயில்லை என்று தானே
சொன்னார், எங்காவது இங்கே,
ஈழம் கட்டாயம் தேவை, தமிழர்கள்
இலங்கையில் சொல்லொணா
துயருகிறார்கள், அவர்களுக்கு
ஈழம் தான் இறுதியான உறுதியான
தீர்வு, என கருணாநிதி
என்றாவது சொல்லியிருக்கிறாரா?
நாமாக தான் நினைத்துக்
கொண்டோம். கருணாநிதி
ஈழத்தமிழர் துயருற பொறுத்திருக்க
மாட்டார், மத்திய அரசிடம்
சொல்லி தனிநாடு பெற்று
தருவார், ஏனென்றால் அவர்
உலகத் தமிழர்களின் ஒப்பற்ற
தலைவர், முத்தமிழ் அறிஞர்
அப்படி இப்படி என்றெல்லாம்.அவர்
சரியாகவே இருந்தார்.
நாம்தான் வீண் கற்பனையில்
இருந்தோம்.நம்மைத்தானே
நாம் செருப்பால் அடித்துக்
கொள்ள வேண்டும்?
|
அவருக்கு என்ன
குடும்பம் இல்லையா குட்டி
இல்லையா? எவ்வளவு காலத்துக்கு
தான் தமிழ் தமிழன் என்றெல்லாம்
சொல்லிக் கொண்டு இருப்பார்?
அவர் தன் குடும்பத்தை
பார்க்க வேண்டாமா? உங்களையே
கவனித்துக் கொண்டிருந்தால்
எல்லாம் ஆச்சா? தலைக்கு
மேல் பிள்ளைகள் பெண்கள்
இருக்கிறார்கள், பேரன்
பேத்திகள் வந்து விட்டார்கள்,
அவர்களை கவனிக்க வேண்டாமா?
அவர்களை நல்ல நிலைமைக்கு
கொண்டு வரவேண்டாமா?
சும்மா போட்டு டார்ச்சர்
பண்ணிக்கிட்டு.
|
|
 |
 |
|