பெரும்பாடாய் இருக்கிறது
ஒவ்வொரு முறையும்
உன் வெட்கக் குழந்தையை
தாலாட்டி தூங்க வைத்தப்
பிறகு
உன்னை தொட.

என் வளையல்
கொலுசுகளில்
ஒளித்து வைத்திருக்கிறேன்
நான் உனக்கு
தர இருக்கும்
முத்தங்களின் சத்தத்தை..
|
அலங்கோலமாய்
படுக்கை !
ஆசிர்வதிக்கப்பட்டு
இருக்கிறது,
நம் காதல் !
மொழி கண்களை தேர்ந்தெடுத்துக்
கொள்ளும் போது உதடுகள்
பதறுகின்றன.
|
ஒவ்வொரு
ஞாயிற்றுக் கிழமை
விடியலும்
படுக்கையில் கசங்கின
மல்லிகையும், மூலையில்
பறந்துக் கிடக்கிற
அல்வா தின்ற
தாளுமாகவே
விடிகிறது!
|

காதல் என்பது
தென்னை மரத்தின் கீழ்
நின்று குடிக்கும்
பால் போல.
காமம் என்பது
பசுமாட்டின் அருகில்
நின்று குடிக்கும்
கள் போல.

பெருங்காதலையும்
பேரன்பையும்
உறிஞ்சும் பொருட்டு
தொடங்கும் முத்தம்
பெரும்பாலும்
உமிழ்நீரோடு
முடிந்து விடுகிறது.
|