! BHAGYALAKSHMII !! WELCOMES !!!

BHAGYA'S ILLAM | ANSWERS | WOMAN | Ivargal | PHOTO MOTTO | my likings | EElam | Stories | CHAT BROOM | CONTACT ME

99.jpg Edit Pictureபெண்ணின் உலகம் ! 

ஆண் பெண் அலி எனும் பெற்றியனே !
சிவபெருமானை திருவாசகம் இப்படிதான் போற்றுகிறது!!!!  இந்தப் பக்கத்தில் ஆணுக்காக பலதும், பெண்ணுக்காக சிலதும், அலிகளுக்காக நலதும் சொல்லப் போகிறேன்.  பொறுமை இருந்தால் படித்து விடுங்கள், எருமையாய் இருந்தால் நகர்ந்து விடுங்கள் !!!

uioyu.jpg

ப்பூவுலகில் ஆண் முதலில் வந்தானா? இல்லை பெண் முதலில் வந்தாளா? என்று கேட்டால் உலகில் பெண் தான் முதலில் வந்தாள். எப்படி? இதை நாம் தெரிந்துக் கொள்ளும் முன் முதலில் முட்டை  வந்ததா இல்லை கோழி வந்ததா என்கிற பழைய கேள்விக்குள் நுழைய வேண்டும்.

கேள்வியையே கவனியுங்கள், கோழி வந்ததா முட்டை வந்ததா, என்பது தான். சேவல் வந்ததா? கோழி வந்ததா? என்பதாக இல்லை. இங்கேயே ஆண் அடிப்பட்டு விடுகிறது.
 சரி, முட்டை வந்ததா கோழி வந்ததா என்கிற கேள்விக்குள் நுழைவோம். முதலில் முட்டை வந்தது என்று வைத்துக் கொள்வோம். அதிலிருந்து ஒரு பேச்சுக்கு கோழி வந்தது என்று வைத்துக் கொள்வோம். அடுத்து அந்த கோழி முட்டை இட்டது என்று சொன்னால், ஏன் அந்த முதல் முட்டையையே ஒரு கோழி இட்டு இருக்கக் கூடாது? சரி, அந்த முட்டையில் இருந்து சேவல் வந்தது என்று எடுத்துக் கொண்டால், அந்த சேவல் தானே அடுத்து முட்டை இட்டு இருக்க வேண்டும், அப்படி சேவல் முட்டை இட்டிருக்குமானால், இன்று வரை சேவல் தானே முட்டை இட்டுக் கொண்டிருக்க வேண்டும். அப்படி இல்லையே, கோழி தானே, முட்டை இட்டுக் கொண்டு இருக்கிறது. ஆக சேவல் வரவில்லை. கோழி தான் வந்திருக்கிறது. .
அதை விடுவோம், சரி, அந்த முட்டை உடைந்துப் போயிருந்தால், ஏனென்றால் இன்று கோழியினமே உலகில் இருந்து இருக்காது. முட்டை வந்ததா? கோழி வந்ததா என்கிற இந்த கால காலத்துக்குமான கேள்விக்கே வழி இருந்திருக்காது.
     முதலில் வந்தது கோழி என்று வைத்துக் கொள்வோம், அந்த முட்டை இட்டு இருக்க வேண்டும், அந்த முட்டை உடைந்துப் போய் இருந்தால், போகட்டுமே, ஒரு முட்டை இட்ட கோழி இன்னொரு முட்டை இடாதா? சரி கோழி வந்திருந்தால் அதுவும் இன்னொரு முட்டை இட்டு இருக்கும். பிறகு இன்னொரு கோழி வந்து இருக்கும். அப்புறம் முட்டை வந்திருக்கும். சேவல் என்கிற ஆண் ஒரு கோளாறு போலதான் உலகிற்கு வந்தது. சேவல் முட்டை இடாமல் கோழி முட்டை இடுவதற்கு ஒரு அனுசரிப்பு போல மாறி தன்னுடைய இருப்பை பூமியில் காப்பாற்றிக் கொண்டது. சரி,இப்படியாக நடந்ததன் சாட்சி தான் இன்றைக்கு நாம் சாப்பாட்டு மெனுவில் இருக்கிற ஆம்லெட்டும், முட்டை தோசையும், முட்டை பரோட்டாவும், சிக்கன்  பிரியாணியும், வறுத்தக் கோழிக் காலும்.
 
    துபோல, உலகில் முதலில் ஆண் வந்திருந்து  அவன் அடுத்து ஒரு ஆணை பெற்றிருந்தால் இன்று வரை இது ஆண் உலகமாக  இருந்திருக்க வேண்டும். அப்படி இல்லையே. சரி பெண்ணை பெற்றிருந்தால் இன்று வரை ஆண்தான் பிள்ளை பெற்றுக் கொண்டு இருப்பான்.அப்படி இல்லையே. பெண்தானே பிள்ளை பேறு அடையும் பாக்யத்தை அடைந்தவளாக இருக்கிறாள்.
சரி உலகில் முதலில் வந்தவள் பெண் என்று கொள்ளுங்கள். அடுத்து வந்தவள் பெண்ணாய் இருந்தால் இன்று வரை பெண்ணுலகமாகவே இருந்திருக்கும். வந்தவன் ஆணாக இருந்தால்......... ஆணாகத்தான் இருந்தான் அதனால் தான் இன்று உலகம் ஆணும் பெண்ணுமாய் இருக்கிறது.
அது மட்டுமல்ல உலகின் எந்த உயிரினத்திலும் முதலில் வந்தது பெண்ணே!!!இதை புரிந்துக் கொள்ளுங்கள்.
 
     திலிருந்து தெரிந்துக் கொள்ள வேண்டியது உலகம் தழைக்க ஆணின் உதவி முதலில் தேவைப்பட்டிருக்கவில்லை. இதை ஆணே, நீ உணர்ந்தால் பெண்ணை அவமதிக்க மாட்டாய். உன்னை இந்த உலகத்திற்கு தந்த பெண்ணை அன்பு செய்துக் கிடப்பாய். உணர்வாயா ஆணே!!! Edit Text

 
    மதங்கள் பெண்தான் உலகில் முதலில்  வந்தவள் என்பதை ஏற்று கொள்கின்றனவா?
 
     கிறிஸ்துவ பைபிள் கர்த்தரானவர் இந்த உலகத்தை, மண்ணை, மரத்தை, கடலை, நதியை, சூரியனை, சந்திரனை, நாளை, பகலை, பொழுதை, பறவைகளை, விலங்குகளை அனைத்தையும் படைத்து விட்ட பின்பு இவைகளை ஆள தன் சாயலை உடைய ஆதாமை படைத்தார். பின்பு அவனுக்கு பேச்சு துணைக்கு இன்னொரு நபர் வேண்டும் என்பதற்காக ஆதாமின் விலா எலும்பிலிருந்தே ஏவாளை படைத்தார் என்கிறது.
 
     இஸ்லாமும் கிருத்துவத்தின் கிளைதான் என்பதால் இஸ்லாத்துக்கும் மூலம் கிறித்துவ பைபிள் தான் என்பதால் அவர்களும் ஆதாமே தங்கள் முதல் தகப்பன், அதாவது ஆணே முதலில் வந்தவன் என்கிற கருத்து உடையவர்களாய் இருக்கிறார்கள். இன்றைக்கும் இஸ்லாத்தில் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உண்டு என்பதை நினைவில் கொள்க. ஆனால் ஒரு வகையில் கிறித்துவம்  மேரியானவள் ஆணின் உதவியின்றி கருத்தரிக்க முடியும் பிள்ளைப் பெற முடியும் என்பதை இயேசுவின் பிறப்பின் மூலமாக காட்டிக் விடுகிறது. இது அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்த பழுது என்று தான் சொல்ல வேண்டும். மற்றபடி மதங்கள் முதன்மையாக பட்சமாக அல்ல, இரண்டாம் பட்சமாகக் கூட நடத்தாது. வேறாக பெண்களை அடிமைப்படுததான் விரும்பும். ஏனென்றால் அதற்கு காரணம் இருக்கிறது. ஏனென்றால் மதங்கள் ஆண்களாலே நிறுவப்பட்டவை. மேலும் கடவுளை முன்னிலைப் படுத்துவதற்காக அல்ல, கடவுளின் பேரால்  பெண்ணை பின்னுக்கு தள்ளுவதற்காகவே நிறுவப்பட்டவை மதங்கள். மதங்கள் வேறு வேறு  ஆனாலும் அம்மதங்களை நிறுவிய மதவாதிகள் ஒன்று போல பெண்ணை 200 சதவிகிதம் புரிந்துக் கொண்டவர்கள். ( இதென்னடா இது? )
 
இந்து மதம் எப்படி ?
 
ஓரளவுக்கு பரவாயில்லை. பெண்ணை ஒப்புக் கொள்கிறது. ஆதிபராசக்தி என்றொரு பெண்ணை ஆதிக்கும் முதலாக ஒப்புக் கொள்கிறது. அதிலும் அபிராமி அந்தாதி படைத்த அபிராமபட்டர் என்பார், பெண்ணே முதல் என்று ஏற்றுக் கொள்கிறார். அந்த ஆதிப்பெண்ணை அவர் கடவுளாக போற்றுகிறார், அவளுக்கு அவர் வைத்த பெயர் தான் அபிராமவல்லி என்பது. ஆனால் அந்த முதற் பெண் அம்மணமாய் தான் இருந்திருப்பாள். ஆனால் அபிராமபட்டர் அவளுக்கு செய்யப் பட்டும், பிச்சி பூவும் வைத்து அழகுப் பார்க்கிறார். அவளுக்கு பின் மற்ற கடவுள்கள் என்பதில் அவர் உறுதியாய் இருக்கிறார். அவளுக்கு பிறந்தவன் தான் சிவன் என்கிறார்.
 

nx.jpg

lh.jpg

kui.jpg

Enter supporting content here