"ஹலோ", "ASL ", "21", "30 ,
ஹவுஸ் வொய் ஃப்பா", "நீங்க
வீட்டுக்கு மட்டும் தான்
வொய்ஃப்பா இல்லே....", (அவ்வளவுதான் இவன்
சாட். பெண்ணொருத்தி சாட்
பண்ணுகிறாள் என்றதும்
வெலவெலத்து விட்டான்.
என்ன பேசுவது என்று தெரியாமல்
அசடு வழியும் ஒரு கேள்வி.
இவன் சாட் ரூமை விடு விட்டு
முதலில் தன்னருகில் உள்ள
பேரிடம் பேச கற்றுக்
கொள்ள வேண்டும். விண்டோவை
மறித்து போட்டேன். )
இன்னொருத்தன்,
"ஹலோ", "ASL ", "25", "30 , ஹவுஸ்
வொய்ஃப்பா",
"ஹவுஸ் வொய்ஃப்பா? அப்ப
ஒண்ணு கேட்கலாமா உங்களை
உங்க முதல் இரவு பத்தி
சொல்றீங்களா?
("இந்த பசங்க ஏன் இப்படி
டம்மி பீஸா இருக்காங்க?")
ச்சே... இந்த சாட்
ரூம்ஸ் ரொம்ப்பப்ப்ப
மோசம்பா .. நான்
வெளிநடப்பு
செய்றம்பா..........

இதோ கவனியுங்கள்.
ஆம்பளை > ஹை,
பாக்யலக்ஷ்மி > asl
ஆம்பளை > 31
பாக்யலக்ஷ்மி > 30 ,
ஹவுஸ் வொய்ஃப்
ஆம்பளை > எனக்கும் கல்யாணம் ஆயிருச்சி.
பாக்யலக்ஷ்மி > சந்தோஷம்.
மனைவி என்ன செய்றாங்க?
கல்யாணம் ஆகி எத்தனை
வருஷம் ஆகுது?
ஆம்பளை > எட்டு வருஷம்
ஆகுது. அவ ஸ்கூல்
டீச்சர். நான் வீட்டில்
இப்ப தனியா இருக்கேன். அப்புறம், உங்களுக்கு
உங்க வீட்டுகாரர் உங்களுக்கு
ஓகே தானே.
பாக்யலக்ஷ்மி > இது
நீங்க கவலைப்பட வேண்டிய
விஷயம் இல்லை. .
ஆம்பளை > ம்ம்ம்...... உங்களுக்கு
குழந்தை இருக்கா?
பாக்யலக்ஷ்மி > ஒரு
ஆண் பிள்ளை இருக்கு.
ஆம்பளை >எங்களுக்கு
குழந்தை இல்லை.
பாக்யலக்ஷ்மி > இதுதான்
நீங்க உண்மையிலேயே கவலைப்பட
வேண்டிய விஷயம்.
ஆம்பளை > என்ன? புரியலை.
பாக்யலக்ஷ்மி > புரியாதது
தான் பிரச்சினையே.
ஆம்பளை > நான் உங்களை
கேட்க வந்ததே வேற. எங்களுக்கு
குழந்தை பிறக்க நான்
என்ன செய்யணும்?
பாக்யலக்ஷ்மி > காலம் கடந்த
கேள்வி. அதுவும் சாட்
ரூமுலே. உங்களை சுற்றி
உள்ளவர்களிடம் என்றோ
கேட்டு இருக்க வேண்டிய
கேள்வி.
ஆம்பளை > பரவாயில்லை.
நீங்க சொல்லுங்க எனக்கு
ஆலோசனை. நான் என்ன செய்யணும் என் மனைவியை?
பாக்யலக்ஷ்மி > சிம்பிள்.உங்க
மனைவிக்கு மறுகல்யாணம்
செய்து வைக்கணும். அப்புறம்
பிறக்குற குழந்தையை உங்க
குழந்தையாட்டம் நினைச்சு
வளர்க்கணும். ஓகே.
ஆம்பளை > ஹலோ, என்னை
பத்தி நீங்க என்ன நினச்சீங்க?
நான் ஆம்பளை.
பாக்யலக்ஷ்மி > அந்த
சந்தேகம் உங்களுக்கு
இருக்குறதாலே தான்
அடிக்கடி இப்படி சொல்லிக்கறீங்க.
உங்க nick nameமும் இப்படி
வச்சுகறீங்க.
ஹலோ,
asl
asl னா என்ன?
பை
ஹலோ, பாக்யா நீங்க யாரு?
உங்க asl ?
asl னா என்ன? நீங்க எந்த
ஊரு? பாக்யா.
உங்க asl சொல்லுங்க.
asl னா என்ன ? பாக்யா.
மெயின் விண்டோல போய்
கேட்கவும். பை.
ஹலோ, நீங்க சொல்லுங்க.
asl னா என்ன ?
asl னா பை ன்னு அர்த்தம்.
Bye
ஹலோ, என்ன போறீங்க? நீங்க
எந்த ஊரு?
உங்க asl சொல்லலைன்னா
சாட் கிடையாது.
asl னா என்ன?
அறுக்காதேப்பா. bye .
ஹலோ இருங்க. நான் male.
அது தெரியுது முழு
asl சொல்லவும்.
asl னா என்ன நான் இந்த
சாட்டுக்கு புதுசு.
அப்ப மெயின் விண்டோவ்லா
சாட் செய்யவும். Bye
ஒரு ASL சொல்ல வக்கு
இருக்கா பாருங்க. சரியான
கழுத்து அறுப்பு.

என்ன போல ஒரு அழகான
மனித கொரில்லாவுக்கு
அசிங்கமாவாச்சும் ஒரு
மனிஷா கொய்ராலா ஒருத்தி
கிடைக்க மாட்டேன்கறாளுவளே!
நான் > asl
ஆண்மகன் > asl னா என்ன?
நான் > பை
ஆண்மகன் > ஹலோ, பாக்யா
நீங்க யாரு?
நான் > உங்க asl ?
ஆண்மகன் > asl னா என்ன?
நீங்க எந்த ஊரு? பாக்யா.
உங்க asl சொல்லுங்க.
ஆண்மகன் > ASL சொல்லலைனா
சட இல்லையோ?
ரொம்பத்தான் பிகு
பண்றீங்க.
நான் > அதிக பிரசங்கம்
வேண்டாம்.
ஆண்மகன் > சரி சொல்றேன்.
A for AGE . ........ என் வயசு பொம்பளையோடு படுக்கற
வயசு. (ஓ, ஒரு வயசு பையன்
போல இருக்கு. ......அவங்க
அம்மாவோடு படுத்துக்குவான்
போல இருக்கு. குழந்தை பையன்......)
ஆண்மகன் > S for SEX . ஒரு ராத்திரிக்கு பத்து தடவை
செய்வேன்.
(ம்ம்ம்ம்.......பத்து
தடவை....!!! ..மறுநாள் காலைலே
பத்து மணிக்கு இவன் வீட்டு
வாசல்லே பந்தல் போட்டு
பாடை கட்டிட்டு இருப்பாங்கனு
தெரியலை இவனுக்கு. செக்ஸ்னா
என்னனு நினைச்சுக்கிட்டு
இருக்கான்... இவன்? நடு ராத்திரி எழுந்து எழுந்து
மூத்திரம் பெய்யறது ன்னு நினைச்சுக்கிட்டு
இருக்கானா? பாவம். செக்ஸ் பத்தி தெரிஞ்சவன்
இப்படி பேச மாட்டான். இது
ஒரு அல்லக்கை.
இங்கொரு தமாஷு:
நண்பர் :/ உங்க ASL என்ன?
பாக்யலக்ஷ்மி :/ உங்க
ASL முதல்லே சொல்லுங்க
?
நண்பர்:/ ரகு, 42 சென்னை. நீங்க?
பாக்யலக்ஷ்மி:/ 30 இல்லத்தரசி.
நண்பர்:/ உங்க உண்மையான
பேரு?
பாக்யலக்ஷ்மி:/ பாக்யலக்ஷ்மி
தான்.
நண்பர்:/ சந்தோஷமுங்க,
உங்க அப்பா அம்மா வச்ச
பேரா?
பாக்யலக்ஷ்மி:/ பின்னே
?
நண்பர்:/ இன்னைக்கு
தாங்க தன்னோட இயற்பேரோட
சாட் பண்ற ஒருத்தரை சந்திச்சதா
நினைக்கிறேன். இத்தனை
நாள் இங்கே இருக்குற
மற்ற பொய்யான பேரோட உண்மைன்னு
நினைச்சு சாட் பண்ணிட்டேன்னு
நினைக்கிறேன். ( மெயின்
சாட் விண்டோவை கவனித்தேன்,
மற்ற பேர்களை. )
பாக்யலக்ஷ்மி:/ இங்கே
இருக்குற மற்ற பேர்களை
உண்மைன்னு நினைச்சிங்களா?
நண்பர்:/ ஆமாங்க........
பாக்யலக்ஷ்மி:/ யாராவது
தாய் தகப்பன்கள் தங்கள்
பிள்ளைகளுக்கு, 'Hotmale for U', 'Aunties wanted',
'Onlyforsex', 'Ladyloafer' அப்படின்னுலாம்
பேரு வைப்பாங்களா? பார்த்தாலே,
தெரியுது, இவனுங்கல்லாம்,
பொய்யான பேருலே தான்
சாட் பண்றாங்கன்னு. நீங்க
என்னன்னா இவங்களை உண்மைன்னு
நினைச்சேன்னு சொல்றீங்கள்ளே,
ஐயா. நல்ல தமாஷு.
|