
கலைஞர் கருணாநிதி
தான் குடியிருக்கும்
வீட்டை நாட்டு மக்களுக்கு
அர்ப்பணித்து விட்டாராம்.
என்னே ஒரு கருணையுள்ளம்
என அவரை வாயுள்ளோர் வாழ்த்துகிறார்களாம். என்னா பண்றது?
தலைவரை காடு வா வாங்குது,
வீடு போ போங்குது !
|

பிரபாகரன் உயிரோடு
இருக்கிறார், முதலில்
நெடுமாறன் ஐயா சொன்னார்,
பிறகு வைகோ சொன்னார்,
அப்பவும் நம்பாத திருமாவளவன்
இப்போது சொல்கிறார்,
தலைவர் இருக்கிறார் என்று.
எனக்கு அப்பவே தெரியுமே. தலைவா!
நீ இறந்ததை நான் நம்பலியே!
ராஜபக்சே டவுசர்ல இன்னும்
மூத்திரம் நிக்கலியே
!
|

M.K.ஸ்டாலினும் டாக்டர்
பட்டம் வாங்கி விட்டார்.
அது ஒன்று தான் தமிழகச்தின்
குறையாக இருந்தது. கருணாநிதியின்
நல்ல பிள்ளையென்று பேர்
வாங்கி விட்டார், இனி
இவரும் தன தந்தையைப்
போல தமிழ் மக்களுக்கு
நல்லபடியாக காது குத்துவார்
என நம்புவோம் !

சுதந்திரத் தின செய்தியாக
பிரதமர், இந்தியா தன்னுடைய
முக்கிய குறிக்கோளான
9% சதவிகித வளர்ச்சியை
நோக்கி போய் கொண்டு
இருக்கிறது. அரசு அதை
சாதிக்கும் என்றார்.
பல வருஷமா இந்த பலய
பாட்டையே பாடுறியே சிங்கு,
சிங் எ நியூ சாங்!!!

நாட்டின் வேறெந்த
பல்கலைக்கழகத்தை விட
சென்னை அண்ணா பல்கலைக்கழகம்
இந்த ஆண்டு அதிக டாக்டர்
படங்களை வழங்கியுள்ளது.
குறிப்பாக அரசியல்வாதிகளுக்கு.
கொஞ்சம் பொறுங்க! தெருவில்
ஏதோ கூவி விற்கிற சத்தம்
கேட்குது. "டாக்டர் பட்டம்
வாங்கலையோ, டாக்டர் பட்டம்,
டாக்டர் பட்டம் வாங்கலையோ,
டாக்டர் பட்டம்".
|

சென்ற அரை ஆண்டின்
இறுதியில் தேக்க நிலையால்
நமது பொருளாதாரம் 4.5% அளவுக்கு
சரிந்தது. இன்று நாம்
எடுத்த கொள்கை முடிவால்
அது 6% அளவுக்கு உயர்ந்துள்ளது.
இது நாம் எதிர்பாராதது.
இது 8% என்கிற அளவுக்கு
தொடரும் என்று நான் எதிர்ப்பார்க்கிறேன்.
திரும்ப திரும்ப பேசறே....
நீ! திரும்ப திரும்ப பேசறே....
நீ!
|

'நான்' 'நீ' என்று சொல்லும்போது
உதடுகள் ஒட்டாது. 'நாம்'
என்று சொல்லும்போது தான்
உதடுகள் ஒட்டும். ஆகவே
'நாம்' என சொல்ல பழகுவோம். தலீவா, இதுப்போல 'கருணாநிதி'
'ஜெயலலிதா' ன்னு சொன்னாலும் உதடுகள்
ஒட்டலை; அதுவே
'பிரபாகரன்' ன்னு
சொன்னா ஒண்ணுக்கு ரெண்டு
தடவையா ஒட்டுதே!
|

இன்று தகவல் தொழில்
நுட்பம் வானளாவி பரவி
விட்டது. இணையத் தளங்களில்
இன்று நமக்கு கிடைக்காததே
இல்லை என்று ஆகி விட்டது.
www.காம் என தட்டினால் நமக்கு
விரல் நுனியில் எல்லாம்
வந்து விழுகிறது. அடடா,
எங்கே www.சோறு.காம் என்று தட்டுங்கள்,
கலாம் பாய், சோறு வந்து
தட்டில் விழுகிறதா என்று
பார்ப்போம்
|
|
நடிகர் பிரசன்னாவும்
நடிகை சிநேகாவும் காதலிப்பதாக
கோடம்பாக்கம் வட்டாரத்தில்
செய்திகள் பரபரத்துக்
கிடக்கிறது. கூடிய சீக்கிரம்
இவர்கள் டும்டும் கொட்டுவார்கள்
என தெரிகிறது. அம்மாடி,,
இது காதல் தானே, இல்லே
எப்பவும் போல வெறும்
சிநேகம் தான்னு சொல்ல
மாட்டியே !
|
இந்தியா
வரும் நாட்களில் மிக
வேகமாக வளரும். நாட்டின்
இந்த ஆண்டின் வளர்ச்சி
விகிதம் 8 சதவிகிதமாக
இருக்கும் என இந்திய
நிதி அமைச்சர் பிரணாப்
முகர்ஜீ அறிவிப்பு. ஓராயிரம், ரெண்டாயிரம்,
நாலாயிரம், பத்தாயிரம்,
பிம்பிளிகா ஜிலாபி. மாமா,
பிசுகோத்து !
|

காதல் திருமணமோ, பெற்றோர்
பார்த்து நடத்துகிற திருமணமோ
இன்று திருமணங்கள் தோல்வியில்
தான் முடிகின்றன. ஆகையால்
இனி திருமணங்கள் தேவையில்லை.
சமீபத்தில் கமல் நாட்டுக்கு
வழங்கிய மூதுரை இது.
ஆமாம் கமல் உங்கள்
படங்கள் கூடத்தான் தோல்வி
அடைகின்றன. அதற்காக படம்
நடிப்பதையா விட்டு விட்டீர்கள்.
முட்டி மோதலை? அப்படிதான்
கல்யாணங்களும்.
வரும் சுதந்திரத்
தினத்தை சீர்குலைக்க
தீவிரவாதிகள் பெரும்
திட்டம் வகுத்திருப்பதாவும்,
அதை முறியடிக்கும் விதத்தில்
வரலாறு காணாத வகையில்
பாதுகாப்பு பணிகள் நடந்து
வருவதாகவும் மத்திய உள்துறை
அமைச்சர் ப. சிதம்பரம்
தெரிவித்துள்ளார். தீவிரவாதிகள் சுதந்திரத்
தினத்தை தான் சீர்குலைப்பார்கள்,
ஆனால் நீங்களோ இப்படி
பேசி சுதந்திரத்தையே
சீர்க்குலைக்கிற ஆளாக்கும்
!

காங்கிரசை போல 125 வருட பாரம்பரியம்
கொண்ட கட்சி உலகில் வேறு எதுவும்
இல்லை. காங்கிரஸ் இன்னும் நெடுங்காலம் இருக்கும். காங்கிரசை
யாராலும் அழித்து விட முடியாது. அதானே , காசிக்கு போனாலும்
கருமம் தொலையாதுன்கிற
மாதிரி இந்த காங்கிரசும்
தொலையாது போல !

|
|

தமிழகம் இந்த வருடம்
தனது சாராய விற்பனையின்
மூலம் ரூபாய் 10,௦௦௦000 கோடி
வருமானம் ஈட்டியிருக்கிறதாம்.
முதல்வர் பெருமிதம்!
நீங்கள் ஒரு நல்ல ஈட்டிக்காரன்
என்றுதான் எங்களுக்கு
தெரியுமே !!
|