கேள்வியின் நாயகி
நான் ! ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை ராகம்? இதய சுரங்கத்துள்
எத்தனை கேள்வி? என்பது
போல நம் மனதில் தான் எத்தனை
எத்தனை கேள்விகள். ஆனால்
எந்த கேள்விக்கும் பதில்
இல்லை என்பது தான் உண்மை.
ஒரு பதில் அதோனோடையே
இன்னும் பல கேள்விகளை
கூட்டி வருகின்றன. கேள்விகளை
கொண்டு வராத பதில் ஒன்று
இருக்குமானால் அது பதில்
இல்லை.
|
|
|
? இந்தியாவில்
அரசு என்கிற ஒன்று நடந்துக்
கொண்டிருக்கிற மாதிரியே
தெரியவில்லையே? | எங்கே நடக்கிறது.
பிரதமர் எங்கே என்ன செய்துக்
கொண்டு இருக்கிறார்?
பிரதமர் மன்மோகன்சிங்
ஃபேஸ்புக இணையத்தளத்தில்
இணைந்திருக்கிறாராம்.
அதை கேள்விப்பட்டு நிறைய
அரசியல்வாதிகளும் இணைந்து
வருகிறார்களாம்.மன்மோகன்
எழுதுவதை. 84000 பேர் காத்துக்கிடக்கிறார்களாம்.
இந்த எண்ணிக்கை மேலும்
கூடும் என இணையதள நிர்வாகிகள்
கணித்து இருக்கிறார்களாம்.
அரசு நடக்கிறதா என குறைப்படுகிற
நீங்களும் அந்த இணைய
தளத்துக்கு செல்லுங்கள்
.உங்கள் பிரதமர் பதவிக்கான
அனைத்து வேலைகளையும்
முடித்து விட்டீரா என
கேளுங்கள். மக்களின்
சுபிட்சத்துக்கு வழிக்
கோலி விட்டீர்களா எனக்
கேளுங்கள்.நாட்டு மக்களின்
அனைத்து தரப்பினருக்கும்
உணவு, உடை , இருப்பிடம்
உறுதி செய்து விட்டு
தானே ஃபேஸ்புககில் இணைந்தீர்கள்
என்று கேளுங்கள்.சொந்தமாக
ஒரு தீர்மானம் நிறைவேற்ற
முடியாத, உங்கள் அமைச்சரவையில்
இருந்து ஒரு அமைச்சரையும்
நீக்கவோ, சேர்கவோ அதிகாரம்
இல்லாத நீங்கள்..நிற்க,
நடக்க, பேச, தும்ம, இரும
இத்தனையும் சோனியா அனுமதித்த
பின்னரே செய்யும் நீங்கள்
ஃபேஸ்புககில் சேர அவருடைய
அனுமதி பெற்றீரா என கேளுங்கள்புதையலை
காக்கும் பூதம் போல்
பிரதமர் பதவியை ராகுல்
காந்தி அமரும் வரை காப்பற்றி
வைப்பது தானே உங்கள்
வேலை. இந்த வெட்டியான்
வேலை உங்களுக்கு தேவைதானா
எனவும் கேளுங்கள். வெறும்
புள்ளி விவரம் பேசியே
நாட்டை நடத்தி கொண்டு
இருக்கும் நீங்கள் என்றைக்கு
அடித்தட்டு மக்களின்
உணர்வுகளுக்கு ஏற்ப,
அவர்களின் வழக்கை தரம்
மேம்பட எல்லோரும் எல்லாம்
பெறும் வகையில் என்றைக்கு
செயல்பட போகிறீர்கள்
என கேளுங்கள்.ஈழத்தில்
இந்தியா நடத்திய படுகொலைகளும்
அங்கு பெண்களும் குழந்தைகளும்
முதியோர்களும் கதறிய
அவலக் குரல் காதுகளில்
விழவில்லையா என கேளுங்கள்.
இன்றைக்கும் ஈழத்தில்
வதை முகாம்களில் சிக்கி
தவிக்கும் அவர்களின்
கண்ணீர் துயரம் மனவாற்றாமை
உங்களின் மனம் உருக்கவில்லையா
எனக் கேளுங்கள். அப்படி`உங்களின்
காதுகள் அடைப்படுகிற
நீங்கள் உங்கள் தலையை
சுற்றிக் கட்டி கொண்டிருக்கிற
அந்த தலைப்பாகையை கழற்றிக்
கடாசச் சொல்லுங்கள்.
தீவிரவாதம் தீவிரவாதம்
என சொல்லுகிறீர்களே,
அடுத்த மாதம் பெட்ரோல்
விலை, டீசல் விலை, சமையல்
காஸ் விலை உயரும் என தினம்
தினம் அறிக்கை விட்டு
மக்களை கொல்லுகிற உங்களையும்
உங்கள் அமைச்சரவை சகாக்களையும்
விட என்றோ எங்கயோ குண்டு
வைத்து ஒரு பத்து, ஐம்பது
பேரை கொல்லுகிற ஒரு மனநோய்
..பிடித்த தீவிரவாதி எந்த
வகையில் பயங்கரமானவன்
என்றுக் கேளுங்கள். காய்கறி
விலை ஏறி விட்டது, தங்கத்தின்
விலையோ கழுத்தை நெரிக்கிறது,
பங்கு சந்தையிலோ பித்தலாட்டம்,
மழையும் இல்லை, விவசாயிகள்
தற்கொலை, பத்தும் பத்தாததற்கு
பன்றிக்காய்ச்சல் வேறு
படுத்துகிறது, இத்தனையும்
இருக்க நீங்கள் ஃபேஸ்புக்கில்
இணைந்து இருப்பது உங்களுக்கும்
அந்த இணையத்தள நிர்வாகிகளுக்கும்
உள்ள எதாவது புரிந்துணர்வு
ஒப்பந்தமா? இல்லை வியாபார
ரகசியமா? அதைப் பற்றி
சொல்வீர்களா எனக் கேளுங்கள்.
இலங்கை போரை தடுக்க சொன்னபோது
நமது அண்டை நாடுகளில்
தீவிரவாதம் இருப்பது
நம் நாட்டை பாதிக்கும்.
நமது அண்டை நாடுகளின்
பிரச்சினையை தொலைத்து
தருவது நம் கடமை என்று
பிலாக்கணம் பாடுகிற பிரதமரே,
பாகிஸ்தானுக்கு இந்தியா
என்றைக்குமே பிரச்சினையாக
இருக்கிறதே, அப்படியானால்
இந்தியாவை என்ன பண்ணலாம்?
என்று கேளுங்கள். பிரதமர்
மன்மோகன் சிங் இதற்கெல்லாம்
பதில் சொல்ல வேண்டும்.
இல்லையென்றால் ஃபேஸ்புக்கில்
இருந்து ஓடி விடட்டும்.
|
|
|
? கேள்வி:
இந்தியா போருக்கு பின்னால்
இலங்கையில் ஈழ தமிழருக்காக மருத்துவ முகாம்கள்
நடத்துகிறதாமே?
|
!
இந்தியாவுக்கு நேரடியாக மருத்துவ
சிகிச்சைக்கு வந்த பிரபாகரனின்
தாயார் பார்வதி அம்மாவை
கழுத்தை பிடித்து வெளியேற்றின
இந்தியா அங்கே தமிழருக்கு
மருத்துவ முகாம் நடத்துகிறது
என்று சொன்னால் கேழ்வரகில்
நெய் வடிகிறது என்பதை
நம்புகிற அளவுக்கு மடையர்கள்
இல்லை நாங்கள். இதை நம்புகிறவன்
காதில் சீழ் தான் வடியும்.
|

|
|
|
? கேள்வி: இன்னும்
நாலு ஆண்டுகளில் இந்தியா
அனைத்து துறைகளிலும்
தன்னிறைவு அடையும் என
பிரதமர் மன்மோகன் சிங்
சொல்லி இருக்கிறாரே?
|
! பதில்: நம்பாதீர்கள்.
முதலில் தன்னிறைவு என்கிற
வார்த்தையையே எடுத்துக்
கொள்வோம். ஒரு குழந்தையைக்
கூட இன்றைக்கு நீங்கள்
அதுகேட்டதை வாங்கிக்
கொடுத்து தன்னிறைவு அடைய
செய்ய முடியாது. இன்றைக்கு
ஒரு ஐஸ்க்ரீம் கேட்கிற
குழந்தை அது வாங்கி தரப்பட்ட
உடனே அடுத்து ஒரு பொம்மையை
கேட்க தொடங்கிவிடும்.
அது போலஅம்பானிகளிடம்
இன்றைக்கு 1 லட்சம் கோடி
சொத்து இருக்கிறது. அவர்கள்
போதும் என்று சும்மா
இருக்கிறார்களா? இன்னும்
இன்னும் என்று தொழில்களை
துவங்கி பணத்தை வாரி
கொட்டி கொள்ளவில்லையா?
ஆகவே ஒரு குழந்தையிடமே
ஒரு தனி மனிதனிடமே தன்னிறைவு
இல்லை, அப்படியிருக்க
ஒ௦ரு நாடு தினம் தினம்
மக்களை உருவாக்கிக் கொண்டு
இருக்கிறது. பல புதிய
பொருளாதார, சட்ட, கட்டமைப்பு,
மானுட சவால்கள் தோன்றிக்
கொண்டே இருக்கிற போது
அதற்கு தன்னிறைவு என்பதே
கிடையாது. அப்படி யாராவது
சொல்லிக் கொண்டு உங்கள்
வீடு தெருப் பக்கம் வருவார்களானால்,
ஒரு பக்கட் நிறைய சாணி
தண்ணீரை கரைத்து கதவு
பக்கத்தில் வைத்திருங்கள்.
|
|
|
|
? கேள்வி: ஆந்திராவை
போல தமிழ்நாடும் இரண்டு
மாநிலங்களாகப் பிரிக்கப்படுமா?
| ! ஏற்கனவே பிரித்தாகி விட்டதே
, உங்களுக்கு தெரியாதா,
வடக்கு தெற்கு எனப்
பிரிக்கப்பட்டு, வடக்குக்கு
ஸ்டாலின் என்பவரும் தெற்குக்கு
அழகிரி என்பவரும் கவர்னராகக்
கூட நியமித்தாகி விட்டதே.
இன்னம் சில தேர்தல் நடைமுறைகள்
தான் பாக்கி இருக்கின்றன.
இதுவும் நடந்து விட்டால்
யாரு யாரு மந்திரி, யாரு
யாரு எந்திரி என எல்லாம்
ஏற்பாடாகி விடும்.
|
|
|
? பாக்யா நீங்கள் காதல்
பெரிது என்று சொல்வீர்களா,
இல்லை காமம் பெரிதென்று
சொல்வீர்களா? ? |
! காதல் பெரிதா, காமம்
பெரிதா என்று சொல்வதை
விட , எது முதலில் தோன்றியது
என்று சொல்லுவது சுலபம்
என்று நினைக்கிறேன்.
முதலில் ஆதாம் ஏவாள்
என்று ஒரு ஆணும் பெண்ணுமாய்
இருந்தக் காலத்தில் அவர்களுக்குள்
காதல் வந்திருக்க வாய்ப்பு
இல்லை, ஏனென்றால் ஆதாமுக்கு
ஏவாளை விட்டால் வேறு
சாய்ஸ் என்பதே இல்லை.
இன்னொருத்தி இருந்திருந்தால்
அவளா, இவளா இன்று சாய்ஸ்
பார்த்து காதலித்து இருப்பான்.
ஆனால் இல்லையே. அங்கே
அங்கு காதல் பூஜ்யம்
தான். அவர்களிடையே காமம்
தான் இருந்திருக்கும்.
ஆக, காமம் தான் இந்த பூ
உலகை தோற்றியது. . |
?எந்த படத்துலே
நீங்க சொல்ற மாதிரி தொப்புளில்
கில்லி விளையாடறாங்க?
|
! கில்லி விளையாடலையா?
என்னென்னமோ பண்ணியிருக்காங்களே,
இந்நேரம் கில்லியும்
விளையாடியிருப்பாங்கன்னு
நான் பார்த்தேன். . சினிமா
டைரக்டர்ஸ் யோசிக்காத
விஷயத்தை நான் சொல்லிக்
கொடுத்துட்டேனா, அய்யய்யோ,
அந்த கடவுள் என்னை மன்னிக்கணும்.
|
? கிசு கிசு
ஏதாவது சொல்வீர்களா?
|
ஐயோ, அவங்க யாருன்னு
சொல்லி தொலைக்காம
இப்படி என்னை
சுத்தல்லே
விட்டுட்டாளே
இந்த பாக்யா !

|
! ! கிசுகிசு கேட்பதில்
தான் இந்த மனிதர்களுக்கு
எத்தனை ஆர்வம்.. நான் கிசுகிசு
படிப்பேன். ஆனால் பெரும்பாலும்
நம்புவதில்லை. இந்த பத்திரிக்கைக்காரர்கள்
பத்திரிக்கை விற்பதற்காக
என்ன வேண்டுமானாலும்
எழுதுவார்கள். என்று
தெரியும். ஆனாலும், கொஞ்ச
மாதங்கள் முன்னால் ஒரு
கிசுகிசு படித்தேன்.
அதில் "தமிழில் நடித்த
மலையாள சகோதரிகளில் அக்கா
நடிகை தனக்கு ஏற்பட்ட
பணநெருக்கடியின் காரணமாக
மதுரை காமெடி நடிகரை
அணுகினார். அவரும் பண
உதவி செய்து, அந்த அக்கா
நடிகையை தன கட்டுப் பாட்டுக்குள்
கொண்டு வந்து விட்டார்."
என்று ஒரு செய்தி படித்தேன்.
எனக்கு யார் யார் அதுன்னு
புரிந்தது. இருந்தாலும்,
இவளுக்கு என்ன பணக்கஷ்டம்
வந்திட போகுது?, அதுவும்
காமெடி நடிகர் கிட்டே
இவ ஏன் வரணும்? இவளுக்கு
இல்லாத ஆளா? என்னமோ எழுதி
குடும்பத்தை குலைக்குறானுங்க
இந்த பத்திரிக்கை காரங்க"
என்று இருந்தேன். அப்புறம்
சில நாட்கள் கழித்து
நானும் என் கணவரும் ஒரு
வேலையாக, காலை மணி பத்தரை
போல, வண்டியில் வெளியே
போனோம், திண்டிவனம் தாண்டி
போகும் போது தடதடன்னு
ஒரே மழை. வைப்பர் வேலை
செய்யவில்லை. அதனால்
சாலை தெரியவில்லை. சட்டென
வண்டியை ஓரம் கட்டினார்.,
திண்டிவனம் அருகே ஒரு
பாலம் வரும். அதனடியில்
நிறுத்தினார். அங்கு
ஏற்கனவே ஒரு வண்டி நின்று
இருந்தது. பாலத்தின்
சுவருக்கும் அந்த வண்டிக்கும்
இடையில் எங்கள் வண்டி
நிறுத்தப்பட்டது. ஏற்கனவே
அங்கு நின்றிருந்த வண்டியின்
டிரைவர் முன்பக்கம் வண்டியை
திறந்து என்னமோ ரிப்பேர்
செய்துக் கொண்டு இருந்தார்.
நான் மழையை பார்த்துக்
கொண்டு இருந்தேன். என்
கணவர் ஸ்ஸ்....ஸ்ஸ்ஸ்...என்று
சத்தம் கொடுத்தார். நான்
என்னவென்று பார்த்தேன்.
சட்டென பக்கத்துக்கு
வண்டியை கவனிக்குமாறு
கண்களை காட்டினார். நானும்
பார்த்தேன். உள்ளே, அந்த
வைகை காமெடி நீலத்தில்
ஜிகினா சட்டையும் வெள்ளை
வேட்டியுமாக அந்த அக்கா
நடிகையை தன மார்பில்
போட்டுக் கொண்டு கண்மூடி
மெய்மறந்து அணைத்தபடி
முதுகை தடவிக் கிடந்தார்.
அந்த நடிகை ஓணம் பண்டிகையன்று
மலையாளிகள் கட்டுவார்களே,
அந்த சந்தன ஜாக்கெட்டும்,
பொன் சரிகை பார்டர் போட்ட
சந்தன சேலையும் கட்டிக்
கொண்டு சிவப்பு சாயம்
உதடுகளில் மினுமினுக்க
என்னமோ சம்சாரித்துக்
கொண்டிருந்தார். ஓணம்
பண்டிகைக்கு அப்போது
இன்னம் ஒரு வார தூரம்
இருந்தது. இவளுக்கு இப்போதே
கொண்டாட்டம் ஆரம்பித்து
விட்டது போல. ஐயோடா, அந்த கிசுகிசு
உண்மைதான் போல. இவரின் தலை
திரையில் தெரிந்தாலே எப்படி
சிரிக்கிறார்கள், குழந்தைகளும் பெரியவர்களும்,
பெண்களும். அத்தகைய நகைச்சுவை
கோமகன் உள்ளே இத்தனை
காமுகன் ஒளிந்து இருக்கிறானா?
என் கண்களை என்னால் நம்ப
முடியவில்லை. என்ன செய்வது,
அவர் காட்டில் தானே இன்று
நிலா காயுது! நேரம் நல்ல
நேரம்.!.
|
? தெலுங்கானாவை
இரண்டாக பிரிப்பது பற்றி
உங்கள் கருத்து என்ன?
|
! தாராளமாக பிரிக்கலாம்
தென் பகுதி ஆந்திராவை
விட வட பகுதியான தெலுங்கானா
இது வரை ஆண்ட காங்கிரஸ்
அரசாங்கங்களாலும் மற்ற
மாநில அரசாங்கங்களாலும்
புறக் கணிக்கப்பட்டே
உள்ளது. அங்கு எந்த வளர்ச்சித்
திட்டங்களும் இதுவரை
இல்லை. மக்களும் மோசமான
நிலையிலேயே இருந்து வருகின்றனர்.
அவர்கள் தனியாக போக நினைப்பது
இயல்புதான். அதே நேரம்
தெலுங்கர்களுக்கு என்று
இரண்டு மாநிலங்கள், இரண்டு
முதலமைச்சர்களும் இருப்பார்களேயானால்
அவர்கள் மத்திய டெல்லி
அரசிலே தங்கள் மாநில
கோரிகைகளை அழுத்தமாக
வைத்து, அவற்றை நிறைவேற்றிக்
கொள்ளலாம். இப்படியும்
ஒரு அனுகூலம் உண்டு. |
? இந்தியாவும் பாகிஸ்தானும்
காஷ்மீர் பிரச்சினையில்
ஏன் இப்படி எலியும் பூனையும் போல்
இருக்கின்றன? |
! இதற்கு பதில் சொல்லும் முன் எங்கள்
ஊரில் ஒரு ஆட்டோக்காரன்
இருக்கிறான். அழகான மனைவி.
குழந்தைகள் இல்லை. அவள்
வேறு ஒருவனோடு ஓடி விட்டாள்.
இதில் தீர்வு என்ன? மூன்று
தீர்வுகள். ஒன்று அவளை
வெட்டி போட்டு விட்டு
அவன் சிறை செல்ல வேண்டும்.
இது அறிவுலகத்திற்கு
ஏற்ற தீர்வு இல்லை. இரண்டு
அவளை சமாதானப்படுத்தி கூட்டி
வந்து குடும்பம் நடத்த வேண்டும்,
அல்லது மூன்றாவதாக,
அவளை தலை முழுகி விட்டு
அடுத்த வேலையைப் பார்க்க
போக வேண்டும். ஆனால் இவன்
என்ன செய்கிறான் என்றால்,
அவள் படத்தை மணிப்பர்ஸில்
வைத்துக் கொண்டு பொழுதுக்கும்
கண்ணீர் விட்டுக் கொண்டு
தாடி வளர்த்துக் கொண்டு
திரிகிறான். திருமண நாளோ அல்லது
அவள் பிறந்த நாளோ வந்து
விட்டால் போதும், கோயிலில் போய் அவள்
பேருக்கு அர்ச்சனை செய்வான். அவள்
ஓடிப் போன தினம் வந்து
விட்டாலோ, பச்சைத் தண்ணீர் கூட
பல்லில் படாமல் அன்றைக்கெல்லாம்
மூலையில் மடிந்துக் கிடப்பான். எங்கள்
வீட்டு வாண்டுகள் கூட நீங்க ஏன்
இப்படி இருக்கீங்க என்று
அவரை கிண்டல் செய்வார்கள்.
இந்தியாவின் நிலையும்
அந்த ஆட்டோக்காரன் போல்தான்.
காஷ்மீர் என்பது எப்போதோ
கை விட்டுப்போன விஷயம். ஆனால்
இன்னும் இந்தியா அதை
தன்னுடைய மேப்பில் வைத்துக்
கொண்டு இருக்கிறது.
அதுவும் PoK (Pakisthan occupied Kashmir ) என்று
போட்டுக் கொண்டு... ஒன்று
போரிட்டு அதை மீட்க வேண்டும்.
அல்லது அதை விட்டு ஒழிக்க
வேண்டும். ரெண்டே தீர்வு.
அப்படியில்லாமல் காஷ்மீர்
இந்தியாவை சேர்ந்தது
என்று சொல்லிக்கொண்டு
அழுது வடிந்துக் கொண்டு
இருக்கிறது. கொஞ்சம்
வருடம் முன்னால் சீனா
ஒரு வரைப்படம் வெளியிட்டது.
அதில் காஷ்மீர் பாகிஸ்தானுடன்
இருக்கிறது. இந்தியப்
பத்திரிக்கைகள் இதை வெளியிட்டு
இந்திய அரசை உஷார்ப் படுத்தின.
இந்திய அரசும் வெகுண்டு
எழுந்து கண்டனம் தெரிவித்தது,
சீனாவுக்கு அல்ல, அந்த
வரைப்படத்தை வெளியிட்டு
அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக
சொல்லி பத்திரிக்கைகளுக்கு.
நீங்கள் பார்த்தீர்களோ
அந்த வரைப்படத்தை! நான்
பார்த்தேன். காஷ்மீர்
இல்லாத இந்தியா எப்படி
இருக்கிறது என்றால்,
இப்போ மன்மோகன் சிங்
தெருவில் நடந்துப் போகிறார்
என்று வைத்துக் கொள்ளுங்கள்.
அப்போது நீங்கள் மெல்ல
அவர் பின்னே அவரறியாமல்
சென்று, அவர் தலைப்பாகையை
உருவிக் கொண்டு ஓடுவீர்களானால்,
அப்போது அவர் கோபமாக
திரும்பிப் பார்த்தால்
எப்படி இருக்கும், அப்படியாக
இருந்தது.
? சமீபத்தில் கருணாநிதி
கொளத்தூரில் பேசும்போது, நாங்கள் இந்தி மொழியை
எதிர்க்கிறவர்கள் அல்ல என்று
சொல்லி இருக்கிறாரே? |
! கொஞ்சம் பொறுங்கள், நான் பெரியாரின்
சீடன் அல்ல, அறிஞர் அண்ணாவின் வழி வந்தவனும்
அல்ல, நான் தமிழனே கூட
அல்ல என்றெல்லாம் கூட
சொல்லப் போகிறார். கழுத்துக்கு
மேலே காசு சேர்ந்து
விட்டால் இப்படிதான். மடி கனத்து
விட்டது. ஆகவே வழியில்
பயம் வந்து விட்டது அவருக்கு.
? பெண்ணை Woman என்று
ஏன் சொல்லுகிறோம்? |
! !Man என்று
ஏன் சொல்லுகிறார்கள்
என்பதை முதலில் தெரிந்துக்
கொண்டு விட்டீர்களா?
ஆச்சர்யகரமாக Man என்பது
ஒரு தமிழ் வார்த்தை. வெள்ளைக்காரன்
நம்மிடமிருந்து லவட்டிக்
கொண்டு போய் விட்டான்.
கால்போன போக்கில் நடப்பது
கால்நடை. மனம் சொல்லுவதை
கேட்டு நடப்பவன் மனிதன்.
மனிதன் Manidhan, மனம் Manam , மனம்
தான் மன் Man என்று மாறி
போனது. இது தமிழனின் நிலைப்பாடு.
ஆனால் ஒரு வெள்ளைக்கார
ஆண் பெண்ணை 'Wife of Man ' என்பதாக
Woman என்று தான் பார்த்தான்.
இது வெள்ளைக்காரன் ஒரு
பெண்ணை மனைவியாகத்தான்
பார்ப்பான் என்பதன் வெளிப்பாடு
தான் இந்த வார்த்தை. என்ன
செய்வது. அவனின் ஆதிக்க
மனப்பான்மையை தான் இந்த
வார்த்தை காட்டுகிறது.
ஏன்? ஒரு பெண்ணை அவன்
சக உயிரினமாக கருதி Man
She (அவள் ) என்பதாக Manshe மனுஷி
என்று சொல்லியிருக்கக்
கூடாதா? .தமிழன் அப்படிதான்
மனுஷி என்று சொன்னான்.
அல்லது ஒரு வெள்ளைக்கார
ஆண் ஒரு பெண்ணை தாயாகப்
பார்த்திருக்கலாம். Mother
of Man என பார்த்து பெண்ணை
அவன் Moman என்று கூட சொல்லி
இருக்கலாம். ஆனால் ஆண்
என்பவன் பெண்ணை கவிழ்த்துப்
போட்டு பார்க்கிறவன்.
அதனால் தான் அழகாக நிமிர்ந்து
இருக்கிற தாய் அழகோடு
இருக்கிற 'M' என்கிற எழுத்தை
அப்படியே கவிழ்த்துப்
போட்டு 'W' பெண்டாட்டி
என்று ஆக்கி விட்டான்.
சரி, ஆணை Male என்று சொல்லுகிறோம்
மன்னிக்க, சொல்லுகிறான்.
.வெள்ளைக்காரன். பெண்ணை
ஏன் 'Female' என்று சொல்லுகிறான்.
தெரியுமா? தெரிந்தவர்கள்
சொல்லுங்கள். ஒரு கெட்டவார்த்தை
அதில் இருக்கிறது என்பது
மட்டும் உங்களுக்கான
க்ளூ.
|
|
|
|
|
|
|
|
|
|
|