 |
 |
புத்தனின் தேசம் பித்தனின்
தேசம் ஆன கதை தான் மகாவம்சம்.

ஈழத்துக்கும் தமிழகத்துக்கும்
இடையே கடல் சலம்பி சேர்ந்திருக்கிற
இந்த மணல் திட்டை தான்
ராமர் பாலம் என்று கதை
பண்ணுகிறார்கள்.

இதோ இந்தியாவில், இந்த
சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டுள்ள
பீகார்,
இங்கிருந்துதான் விஜயணன்
என்கிற ஆலகால விஷம் தமிழனை
விழுங்க ஈழம் வந்து சேர்ந்தது.

பாவி விஜயணன் கப்பலில்
ஏற்றப்பட்டு தெற்கு நோக்கி
வந்தான்.....

விஜயன் 550 BC – 512 BC
|
ஈழம் யாருக்கு சொந்தம்?
இலங்கை பற்றி சிங்களவன்
புத்தகமான மகாவம்சம்
சொல்லுவதென்ன?
ஒரு காலத்தில் இலங்கை
என்பது தமிழகத்தின் ஒரு
பகுதியாக இருந்தது . தமிழகமும்
இலங்கையும் ஒரே நிலப்
பகுதியாக ஒட்டி இருந்தது.
அப்போது பாண்டிய மன்னன்
ஒருவன் இந்த தமிழக--ஈழ
பெருநிலத்தை ஆண்டதாக
வரலாறு இருக்கிறது.தமிழ் மக்கள்
நாகரீகத்தின் உச்சத்தில்
இருந்தார்கள். கலையும்
பண்பாடும் அவர்களின் இருக்
கண்களாய் இருந்தன. காதலும்
வீரமும் அவர்களிடம் மண்டிக்
கிடந்தன. கொலை, களவு அற்ற
வாழ்க்கை அவர்களின் நிஜத்தில் இருந்தது.
. தமிழன் செய்த பாவமோ
என்னவோ தான், சுமார் 10000
ஆண்டுகளுக்கு முன்னே
வந்த ஆழிப்பேரலை என்கிற
சுனாமியின் காரணமாக இலங்கைக்கும்
தமிழ்நாட்டுக்கும் இடையே
ஆன பெருநிலம் கடலில்
முழுகியது. . அப்படியாக
பிரிந்து தமிழகத்துக்கும்
இலங்கை தீவுக்கும் இடையில்
கடல் புகுந்தது. இடையே
புகுந்த கடல் சும்மா
இருக்குமா? கடல் என்றாலே
எந்நேரமும் சலம்பிக்
கொண்டு தானே இருக்கும்?
அவ்வாறு இரு நிலங்களுக்கிடையே
புகுந்தக் கடல் சலம்ப
சலம்ப நம் தமிழகத்துக்கும்
இலங்கை தீவுக்கும் இடையில்
மணல் திட்டுபோல ஒன்று
உருவாகியுள்ளது. . இன்றைக்கும்
அது கடலுக்கடியில் உள்ளது இதை
தான் சுப்ரமணியன் சாமி
போன்ற பெரு மடையன் ராமர்
கட்டிய பாலம் என்று கடலலைக்கும்
மேலாக சலம்பல் பண்ணிக்
கொண்டு இருக்கிறான்.
அவன் கிடக்கிறான். இவ்வாறு கடற்கோளினால்
ஈழம் நம்மிடையே இருந்து
பிரிந்தது.அன்றைக்கு
நம் ஈழச்சகோதரர்களும்
நம்மை விட்டு பிரிந்தார்கள்.
ஆனாலும் ஒரு 18 கிலோ மீட்டர்கள்
என்பது ஒன்றும் பெரிய
தூரம் இல்லையே. அதனால்
அவர்களுக்கு தொன்றுத்
தொட்டு நம்மோடு உறவு
இருந்தது. இவ்வாறாக இருவேறு
கூறுகளாக பிரிந்துப் போன
தமிழ் மக்களின் வாழ்வில்
வந்து சேர்ந்தது ஒரு
காலக் கொடுவினை வடநாட்டான்
உருவத்தில்.
இன்றைக்கு நேபாளம்
என்று சொல்லப்படுகிற
இந்திய வடநாட்டில் லும்பினி
என்கிற இடத்தில புத்தன்
பிறந்தான். ஆனால் அவன்
பிறந்த லும்பினியை
விட , இன்றைக்கு இந்திய
மாநிலங்களுள் ஒன்றான
பீகார் தான் புத்த மதத்தின்
மையமாக இருக்கிறது. ஏனென்றால்
புத்தன் பீகாரின் தெற்கு பகுதியில்
அமைந்திருக்கும் கயா என்கிற
ஊரில் ஒரு அரச மரத்தின்
அடியில் தான் ஞானம் பெற்றான்.
அதனால் பீகார் புத்தனின்
சொந்த ஊரோ? என்று கருதுகிற
அளவுக்கு பீகார் புத்த
மதத்தின் பீடமாக இருக்கிறது.
எங்கும் புத்த விகாரைகள்.
காணும் இடமெல்லாம் புத்தன்
சிலைகள். பீகாருக்கே
அன்றைக்கு வீகார் என்று
தான் பெயர். நாளடைவில்
தான் அது பீகார் என மாறியது.
அப்படியான பீகாரின் ஒரு
பகுதியை மன்னன் ஒருவன்
ஆண்டு வந்தான் புத்தன் இறந்து
சில நூற்றாண்டுகளே
ஆகி இருந்தது அப்போது.
அந்த மன்னனின் கொடியில்
சிங்கம் இருந்தது. (பீகாரில்
சிங்கங்கள் அதிகம்.) மன்னனும்
புத்தத்தை தழுவி இருந்தான்.
மக்களும் அவ்வாறே. ஆனால்
அந்த மன்னனுக்கு விஜயன்
என்று ஒரு மகன். பொறுக்கி.
தறுதலை. துக்கிரி. பெண்
பித்தன். கொலைகாரப்பாவி.
அந்த துஷ்டனுக்கு நண்பர்கள்
குழாம் வேறு. சுமார் 1000
பேர் வரை என்று என்று
ஒரு படையே வைத்திருந்தான்.
அவர்கள் தெருவில் இறங்கி
விட்டால் அவ்வளவுதான்.
தெருவில் ஒருவர் நடக்க
முடியாது. ஒரு பெண் கடக்க
முடியாது. பார்க்கிற
பெண்ணை எல்லாம் கக்கத்தில்
இடுக்கிக் கொண்டு
போனார்கள். கல்யாண வீடுகளில்
நுழைந்து விட்டால் மொத்தத்தையும்
இவர்களே தின்று அங்கிருந்த
பெண்களுக்கு இவர்களே மாப்பிள்ளைகளாகிப் போனார்கள். பெண்ணை
பெற்றவன் எல்லாம் புத்தி பேதலித்துதான்
போனார்கள்.வியாபாரிகள்
வியாபாரம் செய்ய முடியவில்லை.
கல்லாவில் கையை விட்டு
காசள்ளிக் கொண்டு போனார்கள். தட்டிக்
கேட்ட மக்கள் தெருவிலேயே வெட்டிக்
கொல்லப்பட்டார்கள். மக்கள்
பொறுத்து பொறுத்து பார்த்து
விட்டு மன்னனிடமே கிளம்பி
போனார்கள். மன்னனுக்கும்
முன்பே செய்தி தெரிந்துதான்
இருந்தது. மக்கள் சொன்னார்கள்,
" மன்னா, தாளவில்லை, உங்கள்
பிள்ளையின் தொல்லை. நீங்களாக
அவனை தொலைத்து தலை முழுகுகிறீர்களா?
இல்லை, நாங்களே தொலைத்து
விடட்டுமா?" என்றார்கள்.
மன்னனோ, "நானே அவனை திருத்தி
விடுகிறேன், எனக்கு கொஞ்சம்
அவகாசம் கொடுங்கள்".என்றார்.
"திருத்துவதா, இவனையா,
நடவாத காரியத்தையல்லவா
மன்னரே சொல்லுகிறீர்கள்?
நாங்கள் அவனை முடித்து
விடுங்கள் என்கிறோம்,
இப்படியான பிள்ளை தான்
உங்களுக்கு எதற்கு", இவன்
வருங்காலத்தில் உங்களுக்கு
பின் மன்னனாகி விடப்
போகிற கேடுதான் எங்களுக்கு
எதற்கு?" என்றார்கள். " நான்
கண்டிக்கிறேன் அவனை '
என்றான் மன்னன். "கண்டிக்கும்
காலம் மலையேறி விட்டது,
மன்னா, நாங்களும் உங்களிடம்
உங்கள் மகனை பற்றி புகார்
சொல்லுவது புதிதொன்றும்
இல்லையே, இது இன்றோடு
1008 வது முறையல்லவா" என்றார்கள்.
"நான் என்ன செய்ய" என்றான்
மன்னன். மக்கள் சொன்னார்கள்
தயவு தாட்சண்யமின்றி,
"கொன்று போடுங்கள்" என்று.
அவர்களின் கஷ்டம் அவர்கள்தானே
அறிவார்கள். மன்னன் யோசித்து,
"ஆவன செய்யப்படும்' என்றான்.
பெரும் படை திரட்டப்பட்டது.
மகன் விஜயனும் அவன்
நண்பர்கள் என்று ஒரு
800 பேரும் மன்னன் முன் கொண்டு
வரப்பட்டார்கள். தனக்கு
பிறகு தன் நாட்டை கட்டியாள
வேண்டிய மகன் சங்கிலியால்
கட்டப்பட்டு தன்முன்
கொண்டு வரப்பட்டு நிறுத்தப்பட்டதில் மன்னன்
மனது கலவரப்பட்டுதான்
போனது. மக்களை பார்த்து,
மன்னன் சொன்னான், இதோ,
என் மகன் உங்கள் முன்னால்,
அவனை மன்னிக்க நீங்கள்
விருப்பப்பட மாட்டீர்கள் என்று
எனக்கு தெரியும், மன்னிக்கும்
அளவுக்கு சிறிதான தப்பல்ல
அவனும் செய்தது. . இருந்தாலும்
என் மகனை நான் தண்டிக்க
வேண்டும். அவனையும் அவன்
நண்பர்களையும் ஒரு
கப்பலில் ஏற்றி கடலிலே
தள்ளி கொன்று போடுகிறேன்.
என்ன, சொல்கிறீர்கள்
" என்றான் மன்னன். மக்களோ
இந்த அளவிலாவது இந்த
பிரச்சினை தொலைகிறதே
என்று ஒப்புக் கொண்டார்கள்.
மன்னனின் முடிவுக்கு.
மக்களிடம் இப்படி சொல்லி
விட்டாலும் மனனம் மனம்
மகனை கொள்ள சம்மதப்பட
வில்லை. அகவே அர்த்த ராத்திரியில்
யாரும் அறியா வண்ணம்
அவன் மகன் அடைக்கப்பட்டிருந்த
சிறைச் சாலைக்கு சென்றான்.
மகன் எழுந்து தந்தையை
பார்த்து பல்லைக் கடித்தான்.
தந்தை பொறுத்தான். பின்பு
சொன்னான். "மகனே, விஜயா
, உன்னை நீதான் கெடுத்துக்
கொண்டாய். நீ இன்றிருக்கும்
நிலைக்கு நான் ஒருபோதும்
காரணமில்லை. இப்போதும்
நான் உன்னை கொள்ளப் பிரியப்படவில்லை''
மகன் இடை மறித்தான், "அப்படியானால்
என்னை ஏன் கடலில் தள்ளி
கொள்ள ஒப்புக் கொண்டீர்கள்?"
. மன்னன்," நான் உன்னை கொள்ளாமல்
விட்டு விட்டால் மக்களே
உன்னை கொல்ல தயாராயிருந்தார்கள்
என்பது உனக்கு தெரியுமா?
இப்போது நீ உயிரோடு இருகிறாயானால்
அது என்னால் தான்." மகன்
திரும்பவும் இடை மறித்தான்,"அப்படியானால்,
என்னை நாளை என்னை என்ன
செய்வதாக உத்தேசம்?" மன்னன்
சொன்னான், " நாளை நீங்கள் அனைவரும்
வாங்கலாம் வழியாக வங்காள
விரிகுடாவுக்கு கொண்டு
செல்லப் படுவீர்கள்,
அதற்கு சில நாட்கள் பிடிக்கும்,
அங்கே ஒரு கப்பல் சில
மாலுமிகளுடனும், இருநூறு
நம் படைவீரர்களுடனும்
தயாராக இருக்கும். நீங்கள்
அதில் ஏற்றப் படுவீர்கள்.
நடுக்கடலுக்கு கொண்டு
செல்லப் படுவீர்கள்",
பொறுக்கமாட்டாமல் மகன்
கத்தினான், " அங்கே நாங்கள்
கடலில் தள்ளி கொலை செய்யப்படுவோம்
அதானே, இதை சொல்லவா இவ்வளவு
தூரம் வந்தீர்கள்?போய்
விடுங்கள் இங்கிருந்து "
என்றான். "மகனே, எப்போதும் போல அவசரப்
படுகிறாயே நீ, ஏன் பேச்சை
கேளாததால் தானே இந்த கதிக்கு
இன்று வந்து நின்றிருக்கிறாய்? சொல்வதை
முழுவதும் கேள், கப்பலில்
ஏற்றப்படும் போது உங்கள்
கைகள் இலகுவாகவே கட்டப்பட்டு
இருக்கும், கப்பலில்
கை தட்டுப்படுமிடமெல்லாம்
கத்திகளும், கட்டாரிகளும்
வைக்கப்படும். மாலுமிகளையும்,
நம் வீரர்களையும் கொன்று
கடலில் தள்ளிவிட்டு விடு.
கப்பலோடு நீ எங்காவது
சென்று பிழைத்துக் கொள்,
இதுவே, என் திட்டம், எல்லாம்
ஏற்பாடு செய்தாகி விட்டது,
உங்களுக்கு கப்பலில்
நாம் வணங்கும் புத்தனின் காவி
உடைகளும் வைக்கப்படும்"
மகன் சந்தோஷமானான். குதூகலித்தான்.
அப்புறம் கேட்டான், " கத்திகள்
சரி, கட்டாரிகள் சரி, அது
எதற்கு காவி உடைகள்?"என்று.
மன்னன் திரும்பி நின்றுக்
கொண்டு சொன்னான், "மகனே,கத்திகளும்,
கட்டாரிகள் மட்டுமே உன்னை
செல்லும் இடமெல்லாம்
காப்பாற்றிக் கொண்டு
இருக்காது, சமயத்தில்
காவி உடைகளும், உன்னை
காப்பாற்றும்"."அதெப்படி?".
"சொன்னால் புரியாது மகனே
உனக்கு, அனுபவம் உனக்கு
அதை உணர்த்தும், வருகிறேன்"
என்று சொல்லி விட்டு
மன்னன் வாசல் நோக்கி போனான். பின்
நின்று பக்க வாட்டத்தில் பார்த்து
சொன்னான், " ஆனால் ஒன்று,
எங்கு போனாலும் இங்கு
நீ உன்னாட்டோடு தெரிந்தோ,
தெரியாமலோ தொடர்பில்
இரு" சொல்லிவிட்டு சிறையை
விட்டு வெளியேறினான்
மன்னன். ( கவனியுங்கள்:
இன்று வரை சிங்களன் இந்தியாவுடன்
தொடர்பு வைத்திருக்கிறான்).
விஜயனுக்கும் அவன் நண்பர்களுக்கும்
அந்த ராத்திரியிலேயே
விடிவதற்கு முன்னமையே
மொட்டை அடிக்கப்பட்டு
மீசை மழிக்கப்பட்டு கருப்பு
உடை அணிவிக்கப்பட்டது.
மறுநாள் காலை மன்னன்
மகனும் அவன் நண்பர்களும்
கூண்டு வண்டிகளில் அடைக்கப்பட்டு
வங்காள தேசம் வழியாக வங்காள விரிகுடா
கடற்கரைக்கு கொண்டு
வரப்பட்டார்கள். அங்கு
அவர்களுக்காக பெரிய
கப்பல் ஒன்று தயார் செய்யப் பட்டு
இருந்தது. அந்த கப்பலில்
சிங்கக் கொடி பறந்துக்
கொண்டு இருந்தது. அதில்
சில மாலுமிகளும் இருநூறு
படை வீரர்களும் இருந்தார்கள்.
அதில் மன்னன் மகன் விஜயனும்
அவன் நண்பர்களும் ஏற்றப்பட்டார்கள்.
மன்னன் கண்ணீரோடு கொடியசைக்க
மக்கள் சந்தோஷத்துடன்
தலையசைக்க கப்பல் கரையை
விட்டு விலகத் தொடங்கியது.
அந்த ராத்திரிக்கு அன்று வந்த அந்த
நிலவும் விண்மீன்களும்
கருவானமும் தான் சாட்சி.
விஜயனும் அவன் நண்பர்களும்
தன் கை கட்டுகளை அவிழ்த்துக்
கொண்டார்கள். கைகளால்
அக்கம் பக்கம் துழவினார்கள்.
அங்கங்கே அகப்பட்டது
மன்னனால் மறைத்து வைக்கப்பட்டிருந்த
கட்டாரிகளும், கத்திகளும்,
தடித் காலை விடிவதற்கு
முன் தான் அவர்களை கடலில்
போட உத்தரவு. படை வீரர்கள்
தூங்கிக் கொண்டிருந்தார்கள்,
ஒரு சிலரை தவிர. விஜயனும்
அவன் குழாமும் அவர்களை
சூழந்துக் கொண்டது . அவர்களை
எதிர்பார்த்திராத நிலையில்
அவர்களும் திகைத்துப்
போனார்கள். விஜயன் ஒருவனே
அவர்களின் தலைகளை சீவித்
தள்ளினான். அவர்களின்
அலறல் சத்தம் கேட்டு
மற்றவர்கள் ஓடி வந்தார்கள்.
விஜயனின் நண்பர்கள்
அவர்களை அப்படியே சூழ்ந்து
கொத்துக்கொத்தாய் தலை
அறுத்தார்கள். குலை அறுத்தார்கள்.
குடலை உருவினார்கள்.
அவர்களுக்கு பழக்கமான
ஒன்று தானே, சிரித்துக்
கொண்டே செய்தார்கள்.
தளம் முழுவதும் ரத்தம்
ரத்தம். வழிந்து கப்பலிலிருந்து
கடலிலும் கொட்டியது.
கடலும் சிவந்தது. மாலுமிகளும்
தப்பவில்லை. அவர்களும்
கொல்லப்பட்டு கப்பல்
இவர்களின் கட்டுப்பாட்டுக்குள்
வந்தது. "எங்கே செல்ல?" என்றான்
கப்பலை செலுத்திய விஜயனின்
ஒரு நண்பன். விஜயன் சொன்னான்,
"போ, எங்காவது போ, எங்கே
பெண்களும், பெரும்
பணமும், பெருநிலமும்
இருக்கிறதோ, அங்கே போ!"
. கப்பலோ கழலில் அலைக்
கழிந்தது, சுக்கானை சுழற்றி கப்பலை
நிலை நிறுத்த முயற்சித்தார்கள்.
அங்கும் இங்கும் அலை
பாய்ந்த அந்த கப்பல்
பின்பு தேர்ந்து எடுத்த
திசை, அய்யய்யோ, தெற்கு.
அப்போதெல்லாம்
கப்பல்கள் ரொம்பவும்
மெதுவாகவே செல்லும்.
இன்றைக்கு நாலு நாளில்
செல்கிற ஊருக்கு அப்போது
நாற்பது நாள் எடுத்துக்
கொள்ளும். அப்படிதான்
அந்த கப்பலும் சென்றுக்
கொண்டு இருந்தது. மாதம்
ஒன்று கழிந்தது. உணவு இருப்பும்
தீர்ந்தது. பசி தாங்காத
அந்த விஜயன் மற்றும் அவன் நண்பர்களும் கப்பலின்
மேல் தளத்தில் நின்று
நாலா புறமும் பார்த்தார்கள்.
எதாவது கரை தென்படுகிறதா
என கண்களை இடுக்கிக்
கொண்டு பார்த்தார்கள்.
ஏதேனும் பறவை கூட்டம்
ஒரு திசையாய் பறக்கிறதா
என வானத்தை பார்த்தார்கள்.
இன்னும் நெடிய தூரம்
கடந்தார்கள். கொடூரன்
விஜயன் கரையைக் காணாத
வேதனையில் ஆழ்ந்தான்.
கடலோடு தன் கதை முடிந்து
விடுமோ என முதல் முறையாக பயந்தான்.
ஆனாலும் ஏதோ ஒரு கொடூரக்கடவுள்
அவன் பக்கமாக தான் இருந்தார்.
தொலைத் தூர வானத்தின்
விளிம்பில் ஒரு ஒற்றைப்
பனைமரத்தின் உச்சி அவன்
கண்களுக்கு தெரிந்தது.
விஜயனின் முகத்தில் மெல்லியதாக
தோன்றிய ஒரு மகிழ்ச்சி
பெரியதாக , இன்னும் பெரியதாக
மாறி, 'ஹோ' வென கத்தினான்.
கப்பலின் மேற்தளத்தில்
அங்கும் இங்குமாக தாவி
ஒரு கள்வெறிக் கொண்ட குரங்காக
குதித்தான். அவன் நண்பர்களும்
பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள்.
கப்பலின் சுக்கானை சுழற்றி
அந்த பனை மரத்தை நோக்கி
நகர்த்தினார்கள். இப்போது
ஒற்றைப் பனைமரம் பலவாகியது.
கப்பல் அந்த நிலப்பகுதியை
நெருங்க நெருங்க ஒரு
அழகான தீவு கண்ணுக்கு
தென்படத் துவங்கியது.
அந்த தீவை சுற்றிலும்
நிறைய மரக் கலங்கள் நின்று
இருந்தன. பல தேசத்து வணிகர்களும்
அங்கே வியாபார நிமித்தம்
குழுமி இருந்தனர். அந்த
தீவுக்கான மக்கள் பெரும்
நாகரீகத்துடன் வந்தவர்களை
வரவேற்று மரியாதையுடன்
நடத்தி, தங்கள் வணிகத்தை
முடித்தார்கள். சந்தோஷமாய்
இருந்தது அந்த கடல் நகரம்.
விஜயனும் அவன் நண்பர்களும்,
தங்கள் மரக்கலத்தை ஒருபுறம்
நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி
விட்டு அந்த மண்ணில் தங்கள் ரத்தக் கால்களை
வைத்து இறங்கினார்கள்.
. அந்த தீவின் மைந்தர்கள்,
இவர்களை வணிகர்கள் போலும்
என்று கருதி, அவர்களின்
அருகே வந்து முகமன் கூறி
வரவேற்றார்கள். அந்த
உல்லாசத் தீவின் அழகை
தன் கண்களில் வாங்கிய படி
விஜயன் கேட்டான், "ஐயா,
இந்த தீவின் பெயர் என்ன?"
அவர்கள் சொன்னார்கள்,"இது
ஒரு தீவு. எங்கள் நாடு.
இதன் பெயர் 'தாம்ரபானே',
இங்கு நாகர்களும், யாக்கர்களும்
என இரு பிரிவு மக்கள்
வாழ்கிறோம், நாங்கள்
ஒரு மக்களே, இருந்தாலும்
சில சடங்கு சம்பிரதாய வேறுபாடுகள்
காரணமாய் இரு பிரிவுகளாய் இருக்கிறோம்.
எங்கள் மொழியும் எங்கள்
கலாச்சாரமும் எங்கள்
பண்பாடும் மிகவும் உயர்வானது.
எங்கள் அரசர்களும் மக்களும்
தர்மத்தையும் நீதியையும் தங்களின் கண்களாகக் கொண்டவர்கள்
" என்றனர். அவர்கள் சொன்னதை
தங்கள் காதில் வாங்கியபடி
நகரை நோக்கி நடந்தான்
விஜயன்.
(இன்னும் வரும்)
|
|
 |
 |
|
 |
|
|
 |
 |
 |

யாரிந்த புத்தா?
புத்தர் என்று சொல்லப்
படுகிறவர் இன்றைக்கு
நேபாளம் என்று சொல்லப்படும்
நாட்டின், லும்பினி என்கிற
இடத்தில் கபிலவஸ்து என்கிற
ஊரை தலைநகராகக் கொண்டு
ஆண்டு வந்த சாக்கிய அரச
வம்சத்தை சார்ந்த ராஜா
சுதோதனாவுக்கும், ராணி
மகாமயாவுக்கும் கி.மு.563
ஆண்டில் பிள்ளையாக பிறந்தார்.
கௌதமர் என்பது அவர்களின்
குடும்பப் பெயராகும்
. ராணி மகாமயா குழந்தை
பிறந்தவுடனே இறந்து விட்டதாகவும்,
அல்லது எட்டு நாள்கள்
சென்ற பின் இறந்து விட்டதாகவும்
இருவேறு கருத்துக்கள்
சொல்லப்படுகின்றன. பிறந்த
அக்குழந்தைக்கு சித்தார்த்தா
என பெயரிடப்பட்டது. அக்குழந்தையின்
ஜாதகத்தை கணித்த ஜோசியர்கள்
இப்பிள்ளை பிற்காலத்தில்
மனித ஆசைகளை ஒதுக்கி
தள்ளி அரச சுக போகங்களை
வெறுத்து மக்கள் போற்றும்
மகானாக விளங்குவான் என
தெளிந்தனர். அது கேட்டு
நடுங்கிப் போன தந்தை
சுதோதன தன் மகனை அவ்வாறு
செல்ல தான் விட்டு விட
மாட்டேன் என்றும், தன்
மகனுக்கு அவன் பிறந்த
முதலே, உலக சுகங்களை காட்டி
ராஜ போகத்தில் வாழ வைப்பேன்
என்றும் சபதம் பூண்டான்.
தந்தை சுதோதனா தன்
மகனுக்காக அகண்ட நிலப்பரப்பில்
மிகப் பெரிய அரண்மனை
கட்டினான். அதன் மதில்
சுவர்களை வானளாவ கட்டினான்.
வெளியுலம் என்பதே தன்
மகன் அறியா வண்ணம் அவனை
உள்ளுக்குள் வைத்து அவனை
கவனித்துக் கொள்ள, அவன்
சித்தியாகிய ராணி மஹாபஜபதி
மேற்பார்வையில் பத்து
ஈரத்தாய்களை நியமித்தான்,
தன் பிள்ளை நினைத்த நேரத்தில்
பிடித்த தாயிடம் பாலருந்த.
அவன் விளையாட அனைத்தும்
வைத்தான். புறாக்கள்,
கிளிகள், மயில்கள், பூனைக்
குட்டிகள், ஆனைக் குட்டிகள்,
மான் குட்டிகள், சிங்கக்
குட்டிகள், புலிப் போந்துகள்
என அன்டிது பறவை மிருக
வகைகளையும் ஆங்கே வைத்தான்.
அனைத்து பழத் தோட்டங்களும்,
மலர் தோட்டங்களும், நீச்சல்
குளங்களும் செய்தான்.
அவன் கூட சேர்ந்து விளையாட
தோழர்களும் தோழியரும்
ஏற்பாடு செய்யப்பட்டனர்.
வெளியுலகத்தை சித்தார்த்தனின்
கண்களிலிருந்து முழுவதுமாக
மறைத்தான் அரசன்.
சித்தார்த்தா
தான் இருந்த அரண்மனையையும்
அதன் சுற்று சுவரையுமே
மொத்த உலகம் என நினைத்து
வாழ்ந்து வந்தான். இவ்வாறு
இருக்கும் வேளைகளில்
சித்தார்த்தா தன் நண்பர்கள்,
வேலைகாரர்கள், தன் தேரோட்டியாய்
இருக்கக்கூடிய சன்னா
என்பவனும் கூட சில வேளைகளில்
தன் கூட இருந்து விட்டு
பல வேளைகளில் எங்கோ மறைந்து
விடுவதை உணர்ந்தான்.
தான் மட்டுமே இந்த அரண்மனையில்
எந்த நேரமும் இருந்துக்
கொண்டு இருப்பதை போலவும்
உணர்ந்தான். மற்ற அனனைவரும்
குறிப்பிட நேரங்களில்
மட்டுமே தன் முன்னே வந்து
நிற்பதை கவனிக்கலானான்.
இப்படியாக அவன் வாழ்ந்து
தன் பதினாறு வயதினை அடைந்தவுடம்
அவன் தந்தை ராஜா சுதோதனா
அவனுக்கு தன் தங்கை மகள்
யசோதராவை மணமுடித்து
வைத்தான். அவர்கள் இன்பமாக
கூடி வாழ்ந்து ஒரு மகனையும்
பெற்று ரஹூலா எனவும்
பெயரிட்டார்கள். இத்தனை
சந்தோஷமான வாழக்கையின்
ஊடே சமயத்தில் தன் தந்தை.
அவ்வளவு ஏன், தன் மனைவியும்
கூட தன் மகனை தூக்கி கொண்டு
அவ்வபோது எங்கோ போய்
விடுவதை உணர்ந்து அவன்
கலங்கி வானைத்தை பார்க்கும்
வேளைகளிலே மேலே உயரத்தில்
பல பறவைகள், தன் அரண்மனையில்
இருந்த இறக்கை கத்தரிக்கப்பட்ட
பறவைகள் போலே அல்லாத
வேறு பறவைகள், உயரே பறந்து
பறந்து தன் அரண்மனையின்
சுற்று சுவரை தாண்டி
அதற்கும் அப்பால் எங்கோ
சென்று இறங்குவதை கண்டான்.
இது பற்றி அவன் தன் தேரோட்டி
சன்னாவிடம் கேட்கிறபோது
அவன் எதையோ சொல்லி மழுப்புவதை
கவனித்தான். பல வேளைகளில்
யாருமற்ற பொழுதுகளில்
அவன் அந்த சுற்று சுவரின்
பக்கத்தில் நின்று கூர்ந்து
கவனித்த போது அதற்கு
அப்பாலும் மனித குரல்கள்
ஒலித்ததை கேட்டான்.
|
ஒரு நாள் தன் தேரோட்டியை
மடக்கினான் சித்தார்த்தன்.
"சென்னா, நீ எங்கே அடிக்கடி
காணமல் போய் விடுகிறாய்?
நேற்றுக் கூட உன்னைத்
தேடினேனே,எங்கே போய்
விடுகிறாய், சொல்" என்றான்.
அதற்கு தேரோட்டியோ, " நான்
எங்கே போய் விட போகிறேன்,
இங்கே தான் இருக்கிறேன்"
என்றான். " இல்லை நீ பொய்
சொல்லாதே, நான் சின்ன
குழந்தையல்ல, நீ சொல்வதை
கேட்டுக் கொள்ள, எனக்கு
தெரியும், நீ எங்கோ இந்த
உலகுக்கு அப்பால் போய்
வருகிறாய்." என்றான். "உலகுக்கு
அப்பாலா!" தேரோட்டிக்கு
ஆச்சரியமான ஆச்சர்யம்.
இளவரசர் இந்த அரண்மனையும்
இந்த சின்ன வெளியையுமா
உலகம் என நம்பிக் கொண்டு
இருக்கிறார், கடவுளே,
சித்தார்த்தன் விடவில்லை,
"சென்னா, அதோ அந்த பறவைகளை
பார், அவை எங்கோ அந்த சுவருக்கு
பின்னால் சென்று மறைகின்றன,
அங்கே என்ன இருக்கிறது,
நீயும் அங்கே தான் சென்று
வருகிறாய், சொல், அங்கே
என்ன இருக்கிறது, என்னையும்
அங்கே கூட்டி செல்" என்றான்.
சென்னாவும் சம்மதித்தான்.
|
மறுநாள் சித்தார்த்தன்
தேரோட்டி சின்னாவின்
உதவியுடன் அரண்மனைக்கு
வெளியே வந்தான். வந்தவன்
எங்கெங்கும் விரவிக்
கிடந்த பெருநிலத்தை கண்டான்.
தேங்காமல் ஓடி வந்த தென்றற்காற்றை
உணர்ந்தான். விரைந்து
சென்றுக் கொண்டு இருக்கும்
மக்கள் கூட்டம். விரிந்து
கிடக்கும் பச்சை பசேல்
வயல்கள், நெடுநெடு ஏரிகள்,
வாத்துக் கூட்டங்களை,
வானத்தை முகர்ந்து நிற்கும்
மலை முகடுகள். திறந்த
கண்ணும் வாயும் மூடாமல்
பார்த்தது பார்த்தப்படி
தேரில் முனையில் நின்றுக்
கொண்டு 'ஆ' என்று பார்த்துக்
கொண்டு வந்தான். தேரோட்டி
சென்னா சொன்னான். " போதுமா
இளவரசே, திரும்பி விடலாமா?",
"இல்லை, இன்னும் போ, அந்த
கடைசி மரத்தை வரை பாப்போம்."
தேர் விரைந்தது. அந்த
கடைசி மரம் கடைசியில்லை,
அதற்கு அப்பாலும் மரங்கள்
வந்துக் கொண்டே இருந்தன.
சித்தார்த்தன் வியந்தான்.
"இன்னும் போ, இன்னும் போ,
" என்றான். தேரோட்டி "போதும்
இளவரசே, குதிரைகள் களைத்து
விட்டன, திரும்புவோம்."
என்றான். அப்படியானால்
குதிரைகளை கொஞ்சம் களைப்பாற்று.
நான் சிறிது தூரம் நடந்து
செல்கிறேன்" என்று சொல்லி
தேரை விட்டு இறங்கியே
விட்டான் சித்தார்த்தன்.
குதிரைகளை அவிழ்த்து
விட்டு புல் மேய விட்ட
சென்னா பின்னாலையே ஓடி
வந்தான். சிறிது தூரத்தில்;.
ஒருவர மரத்தடியே அமர்ந்துக்
கொண்டு பிட்சைக்காக
கை ஏந்திக் கொண்டு இருந்தார்.
அதுக கண்ட சித்தார்த்தன்
சென்னாவிடம் கேட்டான்,
"இவர் யார், இங்கே ஏன் அமர்ந்துக்
கொண்டு ஏதோ கேட்பவர்
போல் இருக்கிறார்?", "இளவரசே,
இவன் ஒரு பிச்சைக் காரன்,
சிலர் இவனை ஞானி என்றும்
சொல்கிறார்கள், இவன்
மற்றவர் தருவதை உண்டு
உயிர் வாழ்கிறார்" என்றான்.
அந்த உலகம் அறிய இளவரசு,
மேலும் கேட்டான், "இவர்
சொந்தங்கள், சொத்துக்கள்
மாளிகைகள் எல்லாம் எங்கே
இருக்கின்றன, இவர் இங்கு
இருக்க காரணம் என்ன?" , இவனுக்கு
அப்படியெல்லாம் எது இல்லை,
இளவரசே, இவன் ஒரு தனிக்கட்டை"
,. " இவர் எங்கே தங்குவார்?"
, "இவன் இங்கேயே தங்குவான்
இளவரசே" என்றான் சென்னா.
சித்தார்த்தன் தன வாழ்க்கையில்
முதல் முறையாக முகம்மாறி
விழிக்க ஆரம்பித்தான்.
|
 |
 |
புத்தனை பின்பற்றியவர்கள்
யார்? யார்?
கொலைக்காரர்களும் கொள்ளைக்காரர்களுமே
புத்தனை பின்பற்றியவர்கள்.
உலகத்தை உய்விக்க வந்ததாக
சொல்லப்படும் புத்தனுக்கு
இது வரமா? சாபமா?
சீனர்களாகட்டும். ஜப்பானியர்கள்
ஆகட்டும், , சாம்ராட் அசோகன்
ஆகட்டும், , சந்திரகுப்த
மௌரியன் ஆகட்டும், கனிஷ்கா
ஆகட்டும், இன்றைய சிங்கள
காடையர்கள் ஆகட்டும்.
எல்லாம் கொலைக்கார தலைப்பாகட்டுகள்
தான்.
|
|
|
 |
 |
புத்தன் என்பவனின்
கதை உண்மை தானா? புத்தன்
என்பவன் பல பிறவிகளை
எடுத்ததாக சொல்லப்படுபவை
உண்மையா? புத்தன் ஒரு
தெய்வ பிறவியா? எது உண்மை?
புத்தன் என்பவன் இயேசு
கிறிஸ்துவுக்கு 500 ஆண்டுகளுக்கு
முன்பு பிறந்தவன். அவன்
தன் 29 வயது வரை ஒரு இளவரசனுக்கு
உரிய அனைத்து சுகபோகங்களையும்
அனுபவித்து வாழ்ந்தான்.
எதையும் விட்டு வைக்கவில்லை.
சலிக்க சலிக்க வாழ்ந்தான்.
'போதும் போதும்' என மனம்
திகட்ட வாழ்ந்தான். திடீரென
ஒருநாள் அரண்மைனைக்கு
வெளியே அழைத்து செல்லப்பட,
அவன் உலகின் மற்ற துன்பங்களை
ஒரே நாளில் பார்க்க நேர்ந்ததன்
விளைவாக மனம் பேதலித்து
போனான் என்பதுதான் உண்மை.
ஒரு திடீர் நிகழ்வு ஏற்படுத்திய
மன அதிர்ச்சி அவனை சிதைத்து
விட்டது. அதன் காரணமாக
அரண்மனையை விட்டு வெளியேறினான்.
நேபாள, இந்திய எல்லைகளில்
பைத்தியக்காரன் போல திரிந்தான்.
கடைசியில் சோறும் பிடிக்காமல்
உண்ணாவிரதம் இருந்து
உயிரை விட்டுத் தொலைத்தான்.
மற்றபடி அவன் தெய்வ பிறவி
அல்ல. மானுட பிறவிதான்.
மானுட பிறவிக்கு அப்பாற்பட்ட
எந்த சக்தியும் அவனுக்கு
இல்லை. அவன் பலப் பிறவிகள்
எடுத்ததாக கூறப்படுவது
அனைத்தும் வெறும் கட்டுக்
கதைகளே! அவனை வைத்து வெசந்ரா
ஜாதக கதைகள் என பல கதைகள்
உலவுகின்றன. எல்லாம்
நயா பைசாவுக்கும் புன்னியப்படாத
கட்டுக் கதைகள். படிக்க படிக்க
சிரிப்பாணியாய் இருக்கும்
கதைகள் . அவனை பற்றிய எல்லா
கதைகளும் அவன் இறந்தப்
பிற்பாடு அவனது கொழுத்துப்
போன சிஷ்ய கோடிகள் புனைந்தவை.
இன்றைக்கும் புனையப்படுகின்றன.
புத்தமதம் என்பது இன்று சீனாவால் ஜப்பானால் இந்தோனேஷியாவால் இலங்கையால்
மிக வேகமாக வளர்க்கப்படுகிறது.
உலகில் உள்ள அத்தனை கதைகளும்
புத்தன் கதைகளாய் மாற்றப்படுகின்றன.
வெகுவான ஹிந்து மதக் கதைகள்
புத்தன் கதைகளாய் மாற்றப்பட்டு
விட்டன. ஹிந்து மதக்கதைகள்
தான் புத்தனின் ஜாதக
கதைகளாய் மாறி விட்டன.
குட்டிக்குட்டிக் கதைகள்
அனைத்தும் உலகளாவில்
திருடப்பெற்று 'ஜென்'
கதைகளாய் உலாவ விடப்படுகின்றன.
புத்த மதம் என்பது பணம்
புரளும் பிசினஸ் போல
மாறி விட்டது. கதைகளை
புனைய, திருட, தெரிந்தால்
நீங்களும் புத்த மதத்துக்கு
மாறிக் கொள்ளலாம். ஆயுளுக்கும்
சோற்றுக்கு கவலை இல்லை.
|
Add your content here
|
Favorites
Here's a list of some of my favorite movies:
Jules and Jim, Manhattan, Breaking the Waves
Here's a list of some of my favorite music:
Nirvana, Frank Sinatra, Ibrahim Ferrer
|
 |
|
|